LOADING

Type to search

இலங்கை அரசியல்

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைக்கப்பெற்றது!

Share

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரனால் 15ம் திகதி புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச இணைப்பாளர் மாடசாமி செல்வராசா தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன், பிரதேச கடற்றொழில் சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மருதங்கேணி இலங்கை வங்கி முகாமையாளர், உட்பட கட்சியின் பிரதேச ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.