LOADING

Type to search

இலங்கை அரசியல் கனடா அரசியல்

தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் உயர்வுக்காக அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவரை, ஈழத் தமிழ் இனம் இழந்து தவிக்கிறது .

Share

தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் உயர்வுக்காக அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவரை, ஈழத் தமிழ் இனம் இழந்து தவிக்கிறது .

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி

தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் உயர்வுக்காக அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவரை, ஈழத் தமிழ் இனம் இழந்து தவிக்கிறது

மாவை என்னும் மாபெரும் சரித்திரம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் அரசியல் வரலாற்றில் மாபெரும் ஆளுமையாக திகழ்ந்தார் . அன்னாரின் தமிழ் இனப் பற்று ,மொழிப் பற்று , தேசப் பற்று என்றும் போற்றுதலுக்கு உரியவை.


.
இவ்வாறு திடீரென மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் கனடா வாழ் நடா ராஜ்குமார் அவர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அனூபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “தன் வாழ் நாள் முழுமைக்கும் தமிழ் மக்களின் உயர்வுக்காக உழைத்த ஒரு மாபெரும் மனிதரை , இன்று ஈழத் தமிழ் இனம் இழந்து நிற்கிறது . அன்னாரின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

சோமசுந்தரம் சேனாதிராஜா என்ற இயற் பெயர் கொண்ட இவர் , யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மாவிட்டபுரம் என்ற புகழ் பெற்ற ஊரில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார் . தனது ஆரம்பக் கல்வியை தனது ஊருக்கு அருகில் உள்ள வீமன்காமம் மகா வித்தியாலயத்திலும் ,தனது உயர் கல்வியை காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியிலும் கற்றார் . பின்னர், இலங்கைப் பல்கலைக் கழக வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலை பட்டம் பெற்றார்.

இலங்கைத் தமிழ் தேசிய இயக்கம் , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணி , தமிழர் விடுதலைக் கூட்டணி என பல மட்டங்களிலும் , பின்னர் தமிழ் அரசுக் கட்சியின் பிரதான உறுப்பினராகவும் தொடர்ந்தார் 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலமைப் பொறுப்பில் இருந்து பாரிய சவால்களை எதிர் கொண்டு வெற்றிப் பாதையில் பயணித்தார்.

எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் உலகளாவிய மாநாடுகளில் பிரதம பேச்சாளராக இலங்கை, இந்தியா , ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் .தொடர்ந்து உலகத் தமிழ் இனத்துக்கான இவரின் சேவையைப் பாராட்டி , 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 13 ஆவது உலக மாநாட்டைத் தொடர்ந்து , இவரின் 75 ஆவது ஆண்டு பவழ விழாவை எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அங்கு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் மறைவு எம்மை நிலை குலைய வைத்துள்ளது,

அன்னாரது ஆன்மா சேர பிரார்த்திக்கிறோம்.

இங்ஙனம்,

முனைவர், திரு நடா ராஜ்குமார்
அகிலத் தலைவர்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
அகிலத் தலமைச் செயலகம்
கனடா.