LOADING

Type to search

அரசியல்

மன்னாரில் அரச இலட்சினையை தவறாக பயன்படுத்தும் அரசியல்வாதி.

Share

(27-03-2022)

மன்னாரில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் அரச இலட்சினையை தவறாக பயன்படுத்தி தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நானாட்டான் பிரதேச சபையின் போனஸ் ஆசன உறுப்பினர் றொஜன் என்பவரே குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.

குறித்த பிரதேச சபை உறுப்பினர் அரசியல் பிரதிநிதியாக இருந்த நிலையில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும் குறித்த நபர் பிரதேச சபை உறுப்பினராக இருந்து மணல் ஏற்றும் நடவடிக்கை உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில்,அவர் திடீர் மரண விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க மன்னார் நீதி மன்றத்தினால் எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாத நிலையில்,திடீர் மரண விசாரணை நடவடிக்கைகளை மாவட்டத்தில் உள்ள ஏனைய திடீர் மரண விசாரணை அதிகாரிகள் முன்னெடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் தனது வாகனத்திற்கு பெயர் பலகையை திடீர் மரண விசாரணை அதிகாரி என சிங்களத்தில் தயாரித்து அதில் அரச இலட்சினையை யும் தவறாக பயன்படுத்தி குறித்த பெயர் பலகையை பயன்படுத்தி வருகிறார்.

குறித்த அரச இலச்சினை பயண்படுத்தப்பட்ட பெயர் பலகை குறித்த பிரதேச சபை உறுப்பினரிடம் உள்ள ஏனைய வாகனங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு ஏனையவர்கள் பயன்படுத்தி வருகின்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் குறித்த பெயர் பலகையினை பயன் படுத்து இராணுவ சோதனைச் சாவடி ஊடாக இவ்வித இடையூறுகளும் இன்றி பயணிப்பதாக தெரிய வருகின்றது.

அரசியல்வாதியான ஒருவரை எவ்வாறு திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளதோடு, அரச இலட்சினையை தவறாக பயன்படுத்தும்,மற்றும் அரசியல் பிரதி நிதியாக உள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் திடீர் மரண விசாரணை அதிகாரி நியமனம் குறித்து நீதி அமைச்சர் மற்றும் நீதி அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.