LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் A.G.A Beauty Academy நிறுவனத்தின் அதிபர் திரு சசிகலா நரேந்திரா தலைமையில் நடத்தப்பெற்ற Miss Tamil Universe-2022 – உலகத் தமிழ்ச் செல்வி-2022 போட்டி சிறப்பாக நடைபெற்றது

Share

கடந்த 26-06-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்ற Miss Tamil Universe-2022

போட்டி நிகழ்வை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பார்த்து மகிழ்ந்து பாராட்டினர்.
கனடாவில் A.G.A Beauty Academy நிறுவனத்தின் அதிபர் திரு சசிகலா நரேந்திரா தலைமையில் நடத்தப்பெற்ற இந்த Miss Tamil Universe-2022 என்னும் உலகத் தமிழ்ச் செல்வி-2022 போட்டி சிறப்பாக நடைபெற்றது. இவ்வருடத்தின் விழா சாதனை படைத்துள்ளது என்றே பேசப்படுகின்றது.

இலங்கையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட இளம் போட்டியாளர்கள் பங்கு பற்றினர். அத்துடன் கனடா ஐரோப்பா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தும் தலா 3 பேர் பங்குபற்றினர்.
கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் நடுவர்கள் இந்த போட்டிக்கான பணியாற்றினர். அவர்களின் ஆற்றல் மிகு பங்களிப்பால் இந்த போட்டி முடிவுகள் சபையோர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்;ணம் இடம் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பல அரசியல் தலைவர்கள் மாகாண மற்றும் மத்திய அரசின் அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த போட்டி நிகழ்ச்சி சபையோரை எவ்வித சலிப்பும் இன்றி பார்த்து மகிழச் செய்தது என்றால் அது மிகையாகாது.

திரு ராகவன் மற்றும் செல்வி அபிசேகா ஆகியோர் ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலும் நிகழ்ச்சி சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். இந்தப் போட்டியின் முக்கிய பங்காளியாக விளங்கிவரு; திரு நரோந்திரா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மிகுந்த பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த இந்த போட்டி விழாவிற்கு முதன்மை அனுசரணையாளராக திரு சங்கர் நல்லதம்பியும் ஸ்காபுறோ லத்திகா நகை மாளிகை நிறுவனத்தினரும் பிரபல வீடு விற்பனை முகவர் கெமர்சன் பத்மநாதனும் தங்கள் ஆதரவை வழங்கியிருந்தனர்.

உலகளவில் நடத்தப்பெற்ற இந்த போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்று Miss Tamil Universe-2022 என்ற கிரீடம் சூட்டப்பெற்றவர் கனடாவைச் சேர்ந்த செல்வி எர்மின் சவாரி ஆவார்.அவருக்கு கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தையும் கனடாவைச் சேர்ந்த சேர்ந்தவர்களான முறையே தாரண்யா மகேந்திரன் மற்றும் பானுஜா விக்கினேஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சபையில் கூடியிருந்த 500க்கும் அதிகமான பார்வையாளர்கள் கரகோசம் செய்து வெற்றியாளர்களைப் பாராட்டினார்கள்