LOADING

Type to search

கனடா அரசியல்

கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் அறிமுகம் செய்யப்பெற்ற கனடா உதயன் ‘இலங்கைச் சிறப்பிதழ்’

Share

இலங்கையின் தலைநகராம் கொழும்பில் அமைந்துள்ள கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் கடந்த 12-07-2022 செவ்வாய்க்கிழமை மாலை கனடா உதயன் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ அறிமுகம் செய்யப்பெற்றது

முன்னாள் வவுனியா அரசாங்க அதிபரும். இலங்கை கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரும் கலை இலக்கிய ஆர்வலருமான திரு ‘உடுவை’ தில்லை நடராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் வி. தேவராஜ் மற்றும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் ஆகியோர் துணை நின்றனர்.
கனடாவிலிருந்து உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கமும் நேரடியாக இந்த விழாவில் கலந்து கொண்டார். அவருடன் கனடா உதயன் சென்னைப்பிரதிநிதி பிரகாஸ் அங்கு சென்றிருந்தார்.

சிவஶ்ரீ வைத்தீஸ்வரக்குருக்கள் . புரவலர் ஹாசிம் உமர், ‘வீரகேசரி’ பிரதம ஆசிரியர்எஸ். ஜே. ஶ்ரீகஜன் அவர்கள். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி காண்டீபன். ‘ தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர். விசு கருணாநிதி- சிரேஸ்ட ஊடகவியலாளர், மலையக மக்கள் முன்னணி உப தலைவர் திரு ச. சதீஸ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அங்கு உரையாற்றிய வீரகேசரி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் ” தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில்தொடர்ச்சியாக ஓரு வாரப் பத்திரிகையை வெளியிடுவதோடு மட்டுமல்லாது தனது படைப்பிலக்கிய பயணத்திலும் 50வது ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள பத்திரிகையாளர் லோகேந்திரலிங்கத்தை நாம் அனைவரும் பாராட்டவேண்டும்;; என்றார்.
மேற்படி கனடா உதயன் இலங்கைச் சிறப்பிதழில் பிரசுரமான படைப்புக்களை எழுதிய சில எழுத்தாளர்களான திரு கனகசூரியர். திருமதி பவானி சச்சிதானந்தம். திருமதி சாஹரி ஆகியோர்க்கு அதன்பிரதிகள் பிரதம ஆசிரியரால் வழங்கப்பெற்றன.

சிவஶ்ரீ வைத்தீஸ்வரக்குருக்கள் . புரவலர் ஹாசிம் உமர், ஆகியோர் உதயன் பிரதம ஆசிரியரை கௌரவித்தனர். அத்துடன் திரு உடுவை தில்லை நடராஜா மற்றும் திரு வீ. தேவராஜ் ஆகியோர் இணைந்து பாராட்டுக் கேடயம் ஒன்றை அன்பளிப்புச் செய்தனர்.