ரொறன்ரோவின் ‘மனித நேயக் குரல்’ அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ‘கனடா நிரோ டான்ஸ் கிறியேசன்ஸ் ‘ நிறுவனத்தின் நிதியுதவியில் வவுனியாவில் மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்கள்
Share
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் கடந்த 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை வவுனியா கோவில் குளம் கிராமத்தில் இடம் பெற்றது.
-மாணவர்களுக்கு சூழல் அறிவு மற்றும் சூழல் விழிர்ப்புணர் வை ஏற்படுத்தி மாணவர்களை சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்குடனும்,அவர்களுடைய ஆளுமைகளை விருத்தி செய்யவும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் தொடர்ச்சியாக குறித்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அங்கமாக வெள்ளிக்கிழமை 16ம் திகதி மாலை வவுனியா கோவில்குளம் கிராமத்தில் குறித்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.லோகேந்திரலிங்கம் கலந்து கொண்டார்.மேலும் விருந்தினர்களாக முன்னாள் ‘வீரகேசரி’ பிரதம ஆசிரியர் வி. தேவராஜ், கனடா உதயன் பத்திரிகையின் சென்னைப் பிரதிநிதி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு வழங்கப்பெற்ற மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்களுக்கான நிதியை கனடாவில் இயங்கிவரும் ‘ரொறன்ரோவின் மனித நேயக் குரல்’ அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ‘கனடா நிரோ டான்ஸ் கிறியேசன்ஸ் ‘ நிறுவனம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.