LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா பிரம்ப்ரன் மாநகாில் புதிதாக குடியேறியவர்களுக்கு இலவச ’பேருந்து சுற்றுலா’

Share

ப்ராம்ப்ட்ட ன், ON (ஜூலை 27, 2022) – ப்ராம்ப்ட்ட ன் நூலகம் மற்றும் ப்ராம்ப்ட்ட ன் பேருந்து போக்குவரத்து நிறுவனம் ஆகியோர் இணைந்து வழங்கும் இலவசப் புதிய பேருந்து சுற்றுலாவை மேற்கொள்ள ஜனவரி 1, 2019க்குப் பிறகு ப்ராம்ப்ட்ட ன் நகருக்கு புதிதாக குடியேறியவர்கள் தகுதி பெறுகிறார்கள்.

சுற்றுலா பயணங்கள் ஆகஸ்ட் 16 மற்றும் ஆகஸ்ட் 18 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மேற்கொள்ளப்படும். குடியிருப்பாளர்கள் ஆன்லைனில் bramptonlibrary.ca அல்லது 905.793.4636 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.

சுற்றுலா பயணத்தின் சிறப்பம்சங்களில் ப்ராம்ப்ட்ட ன் நகர் மன்றம், பூங்காக்கள், மருத்துவமனைகள், சமுதாய மையங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் நூலகக் கிளைகள் ஆகியவை அடங்கும். ப்ராம்ப்ட்டனைப் பற்றி அறிந்து கொண்டு வேடிக்கையில் இணையுங்கள்!

பெருந்தொற்றுநோய் காரணமாக இரண்டு வருடகால இடைநிறுத்தத்திற்குப் பிறகு, விருது பெற்ற இந்த சுற்றுலா பயணமானது, பொது நூலக சேவையில் சிறந்து விளங்குவதற்கான அங்கஸ் மோவாட் விருது (Angus Mowat Award), பொது நூலக சங்கம் அப்ஸ்டார்ட் இன்னோவேஷன் விருது மற்றும் கனடியன் நகர்ப்புற போக்குவரத்து சங்கத்தின் (CUTA) விருது போன்ற விருதுகள் பெற்றபடி அங்கீகாரம் பெற்றுள்ளது.

அறிஞர் கூற்றுக்கள்

“2019 ஆம் ஆண்டு தொடங்கி, எங்கள் நகருக்குள் புதிதாக குடிபெயர்ந்த குடியிருப்புவாசிகளுக்கு புதியவர்களுக்கான பேருந்து சுற்றுலாவை வழங்கப்ராம்ப்ட்டன் நூலகத்துடன் மீண்டும் கூட்டு சேருவதில் ப்ராம்பட்டன் நகரம் உற்சாக கொண்டுள்ளது. ப்ராம்ப்ட்ட ன் ஒரு பலகலவை நகரம் ஆகும், மேலும் எங்கள் நகரம் பலதரப்பட்ட, பன்முக கலாச்சாரம், இளமை மற்றும் சுறுசுறுப்புடன் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. இந்த சுற்றுலா பயணங்கள் புதிய ப்ராம்ப்ட்டன்வாசிகளுக்கு நகரை அறிமுகப்படுத்தும் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகின்றன; இவை அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.”

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“எங்கள் பயணிகளுக்கு வரவேற்கத்தக்க, அனைத்தையும் உள்ளடக்கிய சூழலை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். புதிய குடியிருப்புவாசிகள் நட்புறவான எங்கள் ஊழியர்களைச் சந்திக்கவும், கேள்விகளைக் கேட்கவும், எங்கள் விரிவான பொதுப் போக்குவரத்து நெட்வொர்க்கின் பலன்கள் மற்றும் வசதிகளை அனுபவிக்கவும் இந்தச் சுற்றுலாப் பயணம் சிறந்த ஒரு வழியாகும்.”

– அலெக்ஸ் மிலோயெவிச், பொது மேலாளர், ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து அமைப்பு

“புதிய குடியிருப்பாளர்களுக்கு ப்ராம்ப்ட்ட ன் வழங்கும் விஷயங்களுக்கு அறிமுகத்தை வழங்கும் இந்த பேருந்து சுற்றுலா பயணத்தை மீண்டும் நடத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ப்ராம்ப்ட்ட ன் நூலகங்கள், இணைப்புகளை ஊக்குவிக்கும் மற்றொரு வழி இதுவாகும்!”

– டோட் கைல் (Todd Kyle), தலைமை செயல்பாட்டு அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நூலகம்