LOADING

Type to search

கனடா அரசியல்

‘இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களை ஒன்றாரியோ மாகாண சபை சபா மண்டபத்திற்கு அழைத்துப் பாராட்டிய முதல்வர் டக் போர்ட்……

Share

ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்

கடந்த வாரம் கனடாவிற்கான இசைப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்த ‘இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களை கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்றாரியோ அரசின் முதல்வர் டக் போர்ட் அரசின் சபா மண்டபத்திற்கு அவரை அறிமுகம் செய்து மரியாதை செய்துள்ளார். அவரை சபையில் அறிமுகம் செய்து வைத்தவர் ஸ்காபுறொ ரூஜ் பார்க் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் ஆவார்.. இதை கனடா வாழ் இந்திய மற்றும் இலங்கை மக்கள் பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

‘இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களை தனது குயின்பார்க் அலுவலகத்திற்கு அழைத்து தனது உத்தியோகபூர்வ இருக்கையில் மகிழ்ச்சியுடன் அமரச் செய்து பெருமையுடன் அவரைப் பாராட்டினார் ஒன்றாரியோ மாநகர முதல்வர் டக் போர்ட். இதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் ஒன்றாரியோ மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் ஆவார் இந்த நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இங்கே காணப்படும் ஒளி நாடாவில் சபையில் ‘இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய ஸ்காபுறொ ரூஜ் பார்க் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் பெருமிதத்துடன் தனது பணியை ஆற்றுவதைக் காணலாம்.

YouTube Video

 

YouTube Short