LOADING

Type to search

கனடா அரசியல்

ரொறன்ரோ விமான நிலையத்தில் கனடா தமிழ் அன்பர்களால் வரவேற்கப்பெற்ற யாழ் மாநகர மேயர் வி. மணிவண்ணன்

Share

கடந்த 27ம் திகதி சனிக்கிழமையும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற கனடிய தமிழர் பேரவையின் ‘தமிழர் தெருவிழா’ கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் முகமாக அழைக்கப்பெற்ற யாழ்ப்பாண மாநகர மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்கள் கடந்த வெள்ளியன்று இரவு தனது துணைவியார் சகிதம் கனடா ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அப்போது அவரை வரவேற்கச் சென்ற உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையக சிரேஸ்ட உபு தலைவர் திரு சிவா கணபதிப்பிள்ளை. வர்த்தகப் பிரமுகர்கள் சங்கர் நலலதம்பி. ஶ்ரீதரன் தவராஜா. பிரபா. சமூக சேவையாளர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் ஆகியோருடன் எடுக்கப்பெற்ற படங்களில் காணப்படுகின்றனர்;

தொடர்ச்சியாக கனடாவில் பல நிகழ்ச்சிகளிலும் சந்திப்புக்களிலும் கலந்து கொண்ட யாழ்ப்பாண மேயர் மணிவண்ணன் அவர்கள் நேற்று எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் அழைப்பின்பேரில் ஒட்டாவா மாநகருக்குச் சென்று அங்கு சில அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்த பின்னர் நேற்று இரவு ரொறன்ரோ திரும்பினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

lJI Journalists Ganesh and Arjune