‘தியாகி திலீபன்’ அவர்களின் 35வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் நினைவுரையாற்றிய தமிழ்நாட்டின் பேச்சாளர் வா. மு. சே. திருவள்ளுவர்
Share
கனடா ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தின் நிறுவனர் திரு தியாகராஜா ரவிச்சந்திரன் தனது குழுவினர் மற்றும் பெற்றோர் மாணவ மாணவிகள் சகிதம் ஏற்பாடு செய்த ‘தியாகி திலீபன்’ அவர்களின் 35வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கடந்த வியாழக்கிழமை தொடக்கம் மாலை நடைபெறுகின்றது.
முதல்நாள் நிகழ்வில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் நினைவுரையும் கவிதையும் சமர்ப்பித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் நினைவுரையாற்ற தமிழ்நாட்டின் பேச்சாளர் வா. மு. சே. திருவள்ளுவர் அழைக்கப்பெற்றிருந்தார்.
அவரது உரையும் அஞ்சலிக் கவிதையும் சபையோர் மனங்களை உருகச் செய்தன. அத்துடன் நேற்றைய நிகழ்வின இறுதியில் வா. மு. சே. திருவள்ளுவர் அவர்களது நூலான ‘உலகவன்’ சிறப்புப் பிரதிகளை அவர் தனது கரங்களால் வழங்க. ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தின் சார்பில் நான்கு பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். தாயக நினைவு பாடல்கள் அங்கு உணர்வோடு இசைக்கப்பெற்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.