LOADING

Type to search

கனடா அரசியல்

ஸ்காபுறோ ‘ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த உதயன் விருது பெற்ற வெளிநாட்டுப் பிரமுகர்கள்

Share

கடந்த 15-10-2022 அன்று வெற்றிகரமாக நடைபெற்ற உதயன் சர்வதேச விருது விழாவில் வெளிநாடுகளுக்கு உரிய சர்வதேச விருதுகளைப் பெற்ற வெளிநாட்டுப் பிரமுகர்களான திருவாளர் சங்கரநாராயணன் (தமிழ்நாடு) தியாகராஜா நிரோஷ் (யாழ்ப்பாணம் இலங்கை0 ஆகியோர் . கனடா- ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து அங்கு கல்லூரி நிர்வாகிகள் மற்றும் அதிபர் ஆசிரியைகள் ஆகியோரால் வரவேற்கப்பெற்றனர்.

ஆலயத்தின் பிரதம குருவும் கல்லூரியின் ஸ்தாபகருமான சிவஶ்ரீ விஜயகுமாரக்குருக்கள் மற்றும் அவரது பாரியார் மற்றும் பணியாளர்களும் அங்கு கூடியிருந்தனர்.

முதலில் சிரேஸ்ட ஆசிரியை திருமதி கோதை அமுதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

அவர் தனது உரையில் “மாணவர்கள் பெரியோர்களை மதித்து அவர்கள் கூறுகின்ற நற்கருத்துக்களை பின்பற்றி தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய வேண்டும்” என்று கூறி அன்றை விருந்தினர்கள் மற்றும் உதயன் ஆசிரியர் ஆகியோர் நற்பணிகளை ஆற்றிவருகினர் என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பிரதம குரு மற்றும் விருது பெற்றவர்கள் இருவர் ஆகியோர் உரையாற்றினர்.
அங்கு உரையாற்றிய பேராசிரியர் சங்கரநாராயணன் அவர்கள் மாணவர்கள் தங்கள் சமயத்தையும் மொழியையும் ஆர்வத்துடன் கற்றுத் தெளிந்து கொள்வதில் பின்நிற்கக் கூடாது என்று தெரிவித்து.

ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயமும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் இந்தப் பணிகளை கனடாவில் ஆற்றிவருவது மெச்சத்தக்கது என்றார். தியாகராஜா நிரோஷ் அவர்களும் தனது கருத்துக்களை மாணவர்கள் விளங்கும் அளவிற்கு பகிர்ந்து கொண்டார்.