LOADING

Type to search

கனடா அரசியல்

இனிமையான புதிய பக்திப் பாடல்கள் இல்லாத குறையை ‘வாணிதாசன்’ ஏழுதி இசைத்தட்டில் வெளியிட்டுள்ள ‘முத்துத் தேடல் ‘ பாடல்கள் நீக்கியுள்ளன.

Share

கனடா ஸ்காபுறோ நகரில் வெளியிடப்பெற்ற ‘முத்துத் தேடல்’ பக்திப் பாடல்கள் இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் ‘இன்னிசை வேந்தர்’ பொன் சுந்தரலிங்கம் புகழாரம்

தற்காலத்தில் நாம் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த பக்திப் பாடல்களைத் தவிர தற்காலத்தில் இனிமையான புதிய பக்தி;ப் பாடல்கள் வெளிவருவது அரிதாக உள்ளது. அவ்வாறு இல்லாத குறையை ‘வாணிதாசன்’ ஏழுதி இசைத்தட்டில் வெளியிட்டுள்ள ‘முத்துத் தேடல் ‘ பாடல்கள் நீக்கியுள்ளன. சிறந்த கவித்துவம் கொண்ட ஆறு பாடல்களைத் தந்த அவரை நாம் அனைவரும் எதிர்காலத்தில் ஊக்குவிக்க வேண்டும்

இவ்வாறு நேற்று கனடா ஸ்காபுறோ நகரில் வெளியிடப்பெற்ற ‘முத்துத் தேடல்’ பக்திப் பாடல்கள் இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய ‘இன்னிசை வேந்தர்’ பொன் சுந்தரலிங்கம் புகழாரம் சூட்டினார்.

கவிஞர் மயிலையூர் கஜேந்திரன் நிகழ்ச்சித் தொகுப்பாளராக சிறப்பாக தன் பணியைச் செய்திருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக ‘உதயன்’ பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம். மற்றும் மொன்றியால் நடன ஆசிரியை ஶ்ரீமதி தாரகா சற்குணபால ஆகியோர் அழைக்கப்பெற்றிருந்தனர். பாடல்கள் பற்றிய ஆய்வுரையை ‘சைவப் புலவர்’ திருமதி உமா சூரியகுமார் அவர்கள் ஆற்றினார்.
அனைத்து உரையாளர்களும் தங்கள் பணியை சிறப்பாகச் செய்து இசைத்தட்டைப் படைத்த கவிஞர் வாணிதாசன் அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

சபையோர் மற்றும் வர்த்தக அன்பர்கள் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இசைத் தட்டுப் பிரதிகளை திரு வாணிதாசன்-வசீகரன் தம்பதியிடமிருந்து மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ‘முத்துத் தேடல் ‘இசைத் தட்டிலிருந்த பாடல்கள் சிலவற்றுக்கு நடனங்களை அமைத்து மேடையில் மாணவிகள் வழங்கினார்கள்.

அற்புதா நர்த்தனாலய அதிபர் ஶ்ரீமதி அற்புதராணி கி;ருபைராஜ்அவர்கள் சிலம்பொலி நர்த்தனாலய அதிபர் ஶ்ரீமதி சாந்தி சிவரூபன் அவர்கள் ஆகியோரின் மாணவிகளே அற்புதமான நடனங்களை வழங்கினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.