CUPE தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மீண்டும் நாம் பேச்சுவார்த்தை மேசையில் சந்தித்தபோது நல்ல நம்பிக்கைகளோடு தான் இருந்தோம். ஆனால் நல்ல முடிவு கிட்டவில்லை
Share
பல்லினப் பத்திரிகையாளர்களோடு நடத்திய ஊடகச் சந்திப்பில் மாகாண கல்வி அமைச்சர் விசனம் தெரிவிப்பு
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
கடந்த திங்கட் கிழமை தொடக்கம் மீண்டும் பணிகளுக்கு திரும்புகின்றோம் என்று தெரிவித்து எம்முடன் பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள் ஒன்றாரியோ மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் CUPE தொழிற்சங்கப் பிரதிநிதிகள். மேற்படி தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மீண்டும் நாம் பேச்சுவார்த்தை மேசையில் சந்தித்தபோது நல்ல நம்பிக்கைகளோடு தான் இருந்தோம். ஆனால் அவர்கள் அதிக சம்பள உயர்வையே மீண்டும் வலியுறுத்தினார்கள். பாடசாலை மாணவர்கள் வகுப்பறைகளிலிருந்து கற்பதை அவர்கள் விரும்பவில்லை. மாணவர்களின் நலன்களிலும் பார்க்க அவர்கள் தங்கள் சொந்த நலனைத்தான் விரும்புகின்றார்கள் போலும். அதனால் எமது பேச்சுவார்த்தைகள் மூலம் நல்ல முடிவு கிட்டவில்லை’ ‘
இவ்வாறு நேற்று பிற்பகல் ஒன்றாரியோவில் உள்ள பல்லினப் பத்திரிகையாளர்களோடு நடத்திய ஊடகச் சந்திப்பில் மாகாண கல்வி அமைச்சர் ஸ்டிபன் லெச்சே அவர்கள் விசனத்துடன் தெரிவித்தார். கனடா உதயன் ஆசிரியர் பீடத்தின் உறுப்பினர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட பல்லின பத்திரிகையாளர்கள் அங்கு இணையவழி மூலம் ஊடகச் ச்நதிப்பில் கலந்து கொண்டனர்.
கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் மிகுந்த அவதானமாக பதிலளித்தார். அவருடன் ஒன்றாரியோ கல்வி அமைச்சின்; பாராளுமன்றச் செயலாளர்களாக உள்ள Parliamentary Assistants to the Minister of Education, எம்பிபி Patrice Barnes மற்றும் எம்பிபி Matt Rae,
ஆகியோரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் கூட பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்
எமது கேள்விகளுக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெஸ்சே, வேலைநிறுத்தம் செய்வது என்ற “தேவையற்ற” முடிவால் அரசாங்கம் “மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது” என்றார். அவர் தொடர்ந்து பேசுகையில்
“நாங்கள் நல்ல நம்பிக்கையுடன் மேஜையில் இருந்தோம், மிகக் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் குழந்தைகளை பாடசாலைகளில் கல்வி கற்கும் வகையில் வைத்திருப்பதில் பெற்றோரின் அர்ப்பணிப்புகளை நாம் வெளிப் படுத்தினோம். ஆனால் அவர்கள் மீண்டும் மாகாணத்தில் வேலைநிறுத்தத்தில் குதிக்க ஐந்து நாள் அறிவிப்பை மீண்டும் வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர், ”என்று கூறினார்.
எமது பேச்சுவார்த்தைகளின் போது மத்தியஸ்த்தம் வகித்தவரின் வேண்டுகோளின் பேரில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் இறுக்கமாகப் பேசவில்லை, ஆனால் கல்வி அமைச்சு “பல மேம்பட்ட சலுகைகளை” வழங்கியுள்ளது, இந்த சலுகைள் மற்றும் சம்பள அதிகரிப்பு ஆகியவற்றால் எமது அரசிற்கு “இத்துறை முழுவதும் நூறு மில்லியன் டாலர்கள் அளவில் செலவு செய்ய வேண்டி ஏற்படும் என்று அமைச்சர் லெஸ்சே மெலும் கூறினார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாடுகையில் கடந்த திங்களன்று, எமது அரசாங்கத்தின் சார்பில் எமது முதல்வர் டக் போர்ட் அவர்கள் வேலை நிறுத்தத்திற்கு எதிரான சட்டம் 28-ஐ ரத்து செய்து உரையாற்றினார். அது கூட இந்த தொழிற்சங்கத்தின் தலைவர்களை பாதிக்கவில்லை. இத எமக்கு ஆச்சரியமாக உள்ளது – இது சர்ச்சைக்குரிய போதிலும், வேலை நடவடிக்கையை முடித்து பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புவதற்கான ஒரு நல்ல நம்பிக்கையின் முயற்சியில் சட்டத்தை ரத்து செய்வதாகவே எமது அரசாங்கம் உறுதியளித்தது.
வேலை நிறுத்தத்தில் குதித்த கல்வித் தொழிலாளர்களுக்கான அரசாங்கத்தின் கடைசிப் பேச்சுவார்த்தை நேரத்தில் வழங்கப்பட்ட சலுகையில் $43,000க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு 2.5 சதவீதமும், மீதமுள்ள தொழிலாளர்களுக்கு 1.5 சதவீதமும் அடங்கும். என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் 11 வீத சம்பள உயர்வு மற்றும் சலுகைகளை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் எமது விருப்பம் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவைக்காக அதிக பணத்தை முதலிட வேண்டும் என்பதே’ என்றார்