LOADING

Type to search

விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிராக 126 ரன்கள் குவிப்பு… விராட் கோலி சாதனையை முறிடியத்த சுப்மன் கில்

Share

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 126 ரன்கள் குவித்துள்ள சுப்மன் கில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை குவித்தது. இதில் 54 பந்துகளில் சதத்தை கடந்த இந்திய அணியின் சுப்மன் கில் 20 ஓவர் போட்டிகளில் சதம் அடித்த 5 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

இன்றைய போட்டியில் மொத்தம் 7 சிக்சர், 12 பவுண்டரிகள் விளாசிய கில், மொத்தம் 126 ரன்களை குவித்தார். தனிப்பட்ட முறையில், இந்திய வீரர் ஒருவர் டி20 போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பாக இந்த சாதனையை விராட் கோலி தன் வசம் வைத்திருந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆசியகோப்பை தொடரில் நடந்த போட்டியில் விராட் கோலி 122 ரன்கள் எடுத்திருந்தார். இதுவே சாதனையாக இருந்த நிலையில் அதனை சுப்மன் கில் இன்று முறியடித்து புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளில் மட்டும் மொத்தம் 360 ரன்களை சுப்மன் கில் எடுத்திருந்தார். இதன் மூலம் 3 போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை பாகிஸ்தானின் பாபர் ஆசமுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், கடந்த 2 டி20 போட்டிகளில் சுப்மன் கில்லின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இவ்விரு போட்டிகளிலும் கில் 18 ரன்கள் மட்டுமே எடுததிருந்தார். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் 126 ரன்கள் குவித்து, தன்மீதான அணி மற்றும் ரசிகர்களின் நம்பிக்கையை சுப்மன் கில் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.