LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை யாழ்ப்பாணம், பன்னாலை கிராமத்தில் | வகுப்பறை திறப்பு நிகழ்வு

Share

இலங்கை யாழ்ப்பாணம், பன்னாலை கிராமத்தில் 1855ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 168 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட யா / பன்னாலை சேர் கனகசபை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்றைய நவீன கல்வி கற்ப்பிக்கும் சாதனங்களக விளங்கும் திறன் வகுப்பறை இலங்கையின் சுதந்திர தினமாகிய 4 பெப்புரவரி 2023 ல் பன்னாலை கிராமத்தை சார்ந்தவரும், பல ஆண்டுகளாக இலண்டன் நாட்டில் வசிப்பவருமாகிய திரு வயிரமுத்து இரத்தினம் லோகநாதன் அவர்களுடையதும், மற்றும் International Medical Health Organisation (IMHO) USA , Ratnam Foundation UK, Ramluxmi Charitable Foundation UK ஆகிய ஸ்தாபனங்களின் அனுசரணையுடன் இவ் திறன் வகுப்பறை உத்தியோகபூர்வமாக இவ் விழாவிற்க்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிதழத திரு. வ இ லோகநாதன் அவர்களாள் காலை 9.00 மணிக்கு மங்கள விளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு N ஜெயராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது , அதிபர் தனது உரையில் இன்றைய நாள் எங்கள் பாடசாலையின் வரலாற்றில் ஒரு முக்கிய தினமாக பதியப்பட்டுள்ளது, இவ் திறன் வகுப்பறையை எமது பாடசாலையில் ஆரம்பிக்க தனது முழுமையான ஆதரவை நல்கி இன்றைய தினம் இலண்டன் நகரில் இருந்து வருகை தந்து இவ் திறன் வகுப்றையை திறந்து ஆரம்பித்து வைத்த பன்னாலை கிராமத்தை சேர்ந்த இவ் பாடசாலையில் 60 ஆண்டுகளுக்கு முன்பதாக கல்வி பயின்ற பாடசாலையின் பழைய மாணவன் திரு லோகநாதன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக தனது மனம் நிறைந்த நன்றிகளை கூறினார்.

இவ் நிகழ்வில் வலிகாம வலையப் பிரதிநிதி திரு ஜ கிருபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்,அவர் தனது உரையில் இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு நல்கி வருவது மிகவும் ப்பாராட்ட தக்கது எனவும், திரு லோகநாதன் அவரகளுக்கு இதனது நன்றியை கூறினார்.

இதனை தொடர்ந்து இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த திரு லோகநாதன் அவர்கள் இவ் நிகழ்வில் தான் கலந்து கொண்டமை மிகவும் பெருமையையும் , மகிழ்ச்சியையும் தருகின்றது,

எனவும் தனது ஆரம்ப கல்வியை பயின்ற இப் பாடசாலைக்கு இவ் உதவியை செய்வதற்க்கு சந்தர்ப்பம் அளித்த பாடசாலை  அதிபருக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தனது நன்றியை கூறினார். இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் யாவரும் உதவி செய்ய வேண்டும் என கூறினார்.

இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்த பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்,பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் யாபேருக்கும் பாடசாலை அதிபர் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.