LOADING

Type to search

இலங்கை அரசியல்

‘மன்னர் சார்ல்ஸ்’ தனது முடிசூட்டு விழாவின் மூலம் 900 ஆண்டுகால பாரம்பரியங்களை உடைக்கவுள்ளார்!

Share

ஐக்கிய ராச்சியத்தில் நடைபெறவிருக்கும், மன்னர்‘சார்ல்’ஸின் (King Charles) முடிசூட்டு விழாவின் போது, 900 ஆண்டுகால பழமையான அரச பாரம்பரியங்கள் சிலவற்றை, மன்னர் முதல் முறையாக  உடைக்கவுள்ளதாக அரச தகவல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

சார்லஸ் III ஐக்கிய ராச்சியத்தின் மன்னரும்,  ‘கொமன்வெல்த்’ 14 நாடுகளின் தலைவருமாவார். அவர் ‘வேல்’ஸின் (Wales) மிக நீண்ட கால வாரிசு மற்றும் இளவரசர் ஆவார்.

இவர் தனது 73 ஆவது வயதில், 2022 செப்டம்பர் 8ஆம் திகதியன்று அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி இறந்த பின், பிரித்தானிய சிம்மாசனத்தின் உரிமையுள்ள மன்னரானார். 

இவ்வகையில், மே 6, 2023 அன்று நடைபெறவிருக்கும் தனது முடிசூட்டு நிகழ்வினை, பாரம்பரியங்களில் சில மாற்றங்களுடன் செய்வதற்கான ஒழுங்குகளை மன்னர் சார்ல்ஸ்  மேற்கொண்டு வருகிறார். 

‘டெய்லி ஸ்டா’ரின் (Daily Star) கூற்றுப்படி, 1953 இல் அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, 8300 பேர் அழைக்கப்பட்டிருந்த அதே வேளைமன்னர் சார்ல்ஸ் தனது முடிசூட்டு நிகழ்விற்கான விருந்தினர்  எண்ணிக்கையை வெறும் 2000 ஆக குறைக்கவுள்ளார்! இது, ‘முடியாட்சியின் புதிய சகாப்தத்தை நோக்கிய ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது!

விருந்தினர் பட்டியல் அளவின் பாரிய மாற்றமானது, 900 ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தை உடைக்கும் தன்மையை முழுமையாகக் கொண்டுள்ளது. 

இருப்பினும், மன்னர் சார்ல்ஸ் வெளிநாட்டு மன்னர்களை முடிசூட்டு விழாவிற்கு அழைப்பதில் மாற்றமிருக்காது என கூறப்படுகிறது. ஜோர்டான் மற்றும் ஸ்கன்டினேவிய அரச  குடும்பங்களுக்கு அழைப்பு விடுப்பார் என ஆதாரம் கூறுகின்றது.

“முடிசூட்டு விழா என்பது கடவுளுடன் ஒரு மன்னரின் தனிப்பட்ட நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இவை விதிமுறைகளுடன் நிகழ்த்தப்படுவதாய் ஆரம்பிக்கப்பட்டன” என, அரச குடும்பங்களின் தகவல் ஆதாரங்கள்’, ‘டெய்லி மெயி’லிடம் (Daily Mail) கூறியுள்ளன. 

அவர்கள் தொடர்ந்தனர், “ராணியின் முடிசூட்டு விழாவில் முடிசூட மன்னர்கள் இல்லை, டோங்கா ராணி (Queen of Tonga) போன்ற பாதுகாவலர் ஆட்சியாளர்கள் மட்டுமே இருந்தனர்; இது பல நூற்றாண்டுகளாக ஒரு பாரம்பரியம்”.

முன்னதாக, ‘டெய்லி ஸ்டார்’ (Daily Star) ஊடகமும் சார்ல்ஸ் தனது நடவடிக்கைகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய ஆர்வமாக இருப்பதாக அறிவித்திருந்தது. 

கடந்த காலங்களில் முடிசூட்டு நிகழ்வுகளில் வழக்கிலிருந்த தேதியிடப்படுதல் என்ற பாரம்பரியமும்  மன்னர் சார்ல்ஸ்  இனால் நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

“வேதம் புதுமை செய்” என, பாரதி,  பழமையை புதுமையாய் செய்த வகையில் இதனைக்காணலாமா?  இல்லை, “மாற்றமொன்றே மாறாதது” என, உலக இயக்கத்தின் உண்மை இயல்பு என்றவாறு  இதனை நோக்கலாமா? எதுவாயினும் ஆளுகைகளில், மெதுமெதுவாய் இந்த மரபுகள் மாற்றம் பெறுதலும் வரவேற்கத்தக்கதே!

                                                                                                                      பானு சுதாஹ்ரன்