LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா மேடையில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு பல தடவைகள் புகழாரம் சூட்டிய தமிழகத்தின் ‘பட்டிமன்றத் தாரகை’ பாரதி பாஸ்கர் அவர்கள்

Share

கனடாவில் இயங்கிய வண்ணம் எமது தாயகத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளுக்கு தேவையான பல மருத்துவ உதவிகளை வழங்கிவரும் ‘சர்தேச மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பினர் நடத்திய வருடாந்த விழாவிற்கு தமிழகத்தின் பட்டிமன்றத் தாரகை பாரதி பாஸ்கர் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற இந்த உரையரங்கு மேடையில் பட்டிமன்றத் தாரகை பாரதி பாஸ்கர் அவர்கள் தனது நீண்ட உரையின் இடையில் பல தடவைகள் கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு பல புகழாரம் சூட்டி மகிழ்ந்தார். அவரது எழுத்துக்களால் தான் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஈழத்தமிழர்கள் ‘குவிந்திருந்த” அந்த சபையில் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் பட்டிமன்றத் தாரகை பாரதி பாஸ்கர் அவர்களால் பாராட்டப்பெற்ற எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களால் அதிகளவில் மதிக்கப்படும் எழுத்தாளராகத் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் அ. முத்துலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இங்கே காணப்படும் படம் ஒன்றில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அவர்கள் பாரதி பாஸ்கர் அவர்களுக்கு தமிழகத்தின் பேராசிரியர் சங்கரநாராயணன் எழுதிய கனடாப் பயணம் பற்றிய ‘ பனி பொழியும் தேசத்தில் பத்து நாட்கள்’ என்னும் பயண நூலைக் கையளிப்பதையும் அருகில் புகழ் பெற்ற ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நிற்பதையும் காணலாம்.

நன்றி; புகைப்படம்;  – கனா- நினைவுகள்.கொம்