LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு அடிக்கட்டு உரம் பகிர்ந்தளிப்பு

Share

(27-03-2023)

யு.எஸ்.ஏ.ஐ.டி (U.S.A.I.D) நிறுவனம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய அடிக்கட்டு உரம் இன்றைய தினம் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு மன்னார் உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை(27) காலை 10 மணியளவில் மன்னார் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் அன்ரனி மரின் குமார் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் விருந்தினராக கலந்து கொண்டார்.

-குறித்த உரமானது விவசாயிகளுக்கு ஆரம்ப கட்டமாக பகிர்ந்தளிக்க பட்டுள்ளது.

நீர்பாசன நீர் மூலம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு 22 கிலோ உரமும், மழையை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு 10 கிலோ உரமும் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்டத்திற்கு 1244.9 மெற்றிக் தொன் அடிக்கட்டு உரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உரம் 17 ஆயிரத்து 868 விவசாயிகளுக்கு,21 ஆயிரத்து 621 கெக்டெயர் விவசாயச செய்கையை மேற்கொள்ள பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக உயிலங்குளம் கமநல சேவை நிலைய பதிவை க் கொண்ட விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன் தமத உரங்களை பெற்றுக்கொள்ளுமாறு மன்னார் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் அன்ரனி மரின்குமார் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.