முப்பதாம் ஆண்டு நினைவகலா அஞ்சலி | திருமதி இரத்தினம் அன்னம்மா (யோகம்)
Share
மலர்வு;- 10-04-1943
உதிர்வு:- 03-04-1993
அம்மா ஆண்டுகள் முப்பது ஆயிற்றா நீ மறைந்து!!
அன்பின் திருவுருவே அமைதியின் பெருவடிவே
பண்பின் சிகரமே எங்கள் பாசத்தின் உறைவிடமே
மண்ணிடை வந்துதித்த மரகதமே அம்மாவே – ஆண்டுகள்
முப்பது ஆயிற்ரா நீ மறைந்து ஆற முடியாது அழுகின்றோம் நாமின்றும்
ஏழு பிள்ளை நல்லதங்காளைப் போல் எங்கள் எழுவரைப் பெற்றெடுத்து
வாழ்கின்ற காலம் வரை வறுமையில்வாடி வதங்கி எமக்கு வாழ்வு தந்தவளே
காலமெல்லாம் கவலையோடும் கண்ணீரோடும் காலத்தைக் கடத்தி
பாலும் விதியோ பரமானவன் சதியோ இளம் வயதில் எமைவிட்டுப் பிரிந்தீர்கள்
கனிவான பேச்சு கண்ணியமான நடவடிக்கை உன்னிடம் எப்போதும் உறைந்திருக்கும்
பணிவான உன் நடத்தை பாசமான உன் போக்கு பலரையும் கவர்த்திழுக்கும்
தலைவியாய் நீ நின்று தையிரியமாய் எமை வளர்த்து ஆளாக்கிய அன்புத் தாயே
இனியொரு பிறவி இருப்பது உண்மை என்றால் அடுத்த பிறவியிலும் எங்களுக்கு
அம்மாவாக நீதான் வேண்டும் தாயே ஐந்து பெண்பிள்ளைகள் இரண்டு ஆண் பிள்ளைகள்
ஏழு பிள்ளைகளை ஈன்றெடுத்து வறுமையில் வாடினாலும் வளமோடு நாம்
வாழ உன்னையே உருக்கி உலகிற்கு ஒளி தந்த தாயே வாழவேண்டிய வயதில்
வறுமையில் வாடி நித்தம் கந்தல் துணியாய் கசங்கி காலன் காய் போனவளே
ஆண்டுகள் முப்பதுஆயிற்ரா அம்மா நீ மறைந்து முப்பது என்ன நாம் வாழும் வரை
வீசும் காற்றும் வீழுகின்ற மழைத்துளியும் வாழுகின்ற காலம் வரை வாழ்த்திருப்பாய் நம்மோடு
ஒன்று மட்டும் உண்மையம்மா தரணியில் உன்னை தலை நிமிர்ந்து வாழவைக்க எண்ணியிருந்தோம்
எதுவுமே நடக்கவில்லை காலமெல்லாம் காவல் தெய்வமாய் எமை காத்தருள வேண்டுமம்மா!
தங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகின்றோம் அம்மா1
இங்ஙனம்
பிள்ளைகள். மருமக்கள். பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்…