ஆபத்தான குற்றவாளிகள் பிணையில் விடப்படுவனாலேயே அதிகமான கொலைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று குற்றஞ்சாட்டும் கனடிய பொலிஸ் அதிகாரிகள்
Share
கனடாவின் பல மாகாணங்களில் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் என கருதப்படும் நபர்கள் பிணையில் விடப்படுவனாலேயே அதிகமான கொலைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று குற்றஞ்சாட்டும் கனடிய பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றங்கள் இது தொடர்பாக அதிகம் கவனமெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
கனடாவில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் அறிவித்துள்ள நிலையில் ஆங்காங்கே பலர் இது தொடர்பாக பேசுவதற்கு முன்வந்துள்ளார்கள்; என்றும் அறியப்படுகின்றது.
பிணையில் விடுதலை செய்யப்படும் நபர்களினால் வன்முறைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாண முதல்வர்களுடன் அவசர சந்திப்பு ஒன்று நடாத்த பல்வேறு மாகாணங்களில் செயற்படும் பொலிஸ் பிரிவுகளின் முதன்மை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
அவசர சந்திப்பு ஒன்றுக்கு அனுமதி வழங்குமாறு மாகாண ,முதன்மை அதிகாரிகள் மாகாண முதல்வர்களிடம் எழுத்து மூலமூம் கோரியுள்ளனர்.
அண்மைய நாட்களாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்தக் குற்றச் செயல்களின் பின்ணியை கவனத்திற் கொண்டால், அநேகமான சம்பவங்களின் பின்னணியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நான்கு வருடங்களுக்கு முன்னதாக பிணை வழங்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களின் பின்னர் இந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண காவல்துறை முதன்மை அதிகாரிகள் ஒன்றியத் தலைவர் டேனி ஸ்மித் இந்த விடயங்களைத் ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்துள்ளார்.