LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிளி பாதர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இடம்பெற்றது

Share

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்

தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது

20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் (கிளி பாதர்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது

குறித்த நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது விசேட வழிபாடுகள் நடைபெறது

இதேவேளை இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஜோசப் பிரான்சிஸ் அடிகளாருக்காகவும் மன்றாடப்பட்டது

அதனை தொடர்ந்து கிளிபாதர் அவர்களின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன

நிகழ்வில் கொழும்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மட்டக்களப்பு திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

படுகொலை செய்யப்பட்ட வணபிதா கனகரட்ணம் (கிளி பாதர்) வடகிழக்கு மனித உரிமைகள் பணிப்பாளராகவும் யுத்த காலங்களில் மக்களுக்கு மனிதாபிமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது

20-04-2008 அன்று ஞாயிற்றுக்கிழமை மல்லாவி வன்னிவிளான்குளம் அம்பாள்புரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் ஆராதனையில் கலந்து விட்டு தனது வாகனத்தில் திரும்பிக்கொன்ன்டு இருந்த பொழுது கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது