மொன்றியால் மாநகரிலும் சிறப்பாக நடைபெற்ற எழுத்தாளர் சபிதா செல்வராஜா கோகுலன் அவர்களின் ‘ஒருத்தி’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா
Share
கனடா வாழ் எழுத்தாளர் சபிதா செல்வராஜா கோகுலன் அவர்களின் ‘ஒருத்தி’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா மொன்றியால் மாநகரிலும் கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்றது
கனடா வாழ் எழுத்தாளர் சபிதா செல்வராஜா கோகுலன் அவர்களின் ‘ஒருத்தி’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா மொன்றியால் மாநகரிலும் கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்றது அண்மையில் கனடாவிலும் எமது தாயகத்திலும் படமாக்கப்பெற்ற ‘ஒருத்தி’ தமிழ்த் திரைப்படத்தை தயாரித்த பி. எஸ் .சுதாகரன் அவர்களின் கதையைத் தழுவி ஆங்கிலத்தில் திரைப்படத்தின் கதை ஆக்கித் தந்த எழுத்தாளர் திருமதி சபிதா செல்வராஜா கோகுலன் இந்த நூலைப் படைத்திருந்தார்.
மொன்றியால் மாநகரில் அழைக்கப்பெற்ற எழுத்தாளர்கள் கலைஞர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் கலை இலக்கியம் சார்ந்த துறைகளில் நன்கு அறியப்பெற்றவர்கள் உட்பட பலர் உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ‘ஓருத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கலைஞர் பி. எஸ். சுதாகரன் தனது குழுவினருடன் மொன்றியால் சென்றிருந்தார். தற்போது ரொறன்ரோ மாநகரில் வசிக்கும் ஒலிபரப்பாளர் கோகுலன் அவர்களும் தனது துணைவியார் சபிதாவுடன் அ ங்கு சென்றிருந்தார்.
விழாவில் கலந்து கொண்டகலை இலக்கிய மற்றும் ஊடக நண்பர்களுக்கு பிரதிகள் வழங்கப்பெற்றன. அங்கு எழுத்தாளர் சபிதா கோகுலன் அவர்களின் தந்தையார் செல்வராஜா தம்பதியினர் நூல் பிரதிகளை வழங்க அவற்றை பலர் பெற்றுக்கொண்டனர். இங்கு காணப்படும் படங்களில் எழுத்தாளர் சபிதா கோகுலன் அவர்களை கௌரவித்தவர்களில் கனடா உதயன் தொடர் எழுத்தாளர் திருமதி உமா மோகன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கலைஞர் பி. எஸ். சுதாகரன் தனது குழுவினருடன் காணப்படுகின்றனர்