வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழின படுகொலை நினைவு நாள் ஆரம்பம்
Share
(மன்னார் நிருபர்)
(16-05-2023)
தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும் , முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் வடக்கு கிழக்கில் இடம் பெற்று வரும் நிலையில்,வடக்கு கிழக்கில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம்(16) தமிழின படுகொலை நினைவு நாள் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில் நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழின படுகொலை நாள் நினைவேந்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் தமிழின படுகொலை நினைவு நாள் மே-18 எனும் தொனிப்பொருளில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, வெள்ளைக்கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடொ மற்றும் மெசிமோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டனர்.