LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் கறிராஸ் வாழ்வுதய நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு.

Share

(மன்னார் நிருபர்)

(20-09-2023)

கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினர் தமது இலக்கு கிராமங்களுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் 01 தொடக்கம் 12 வரையிலான மாணவ மாணவிகளை நான்கு பிரிவுகளாக உட்படுத்தி ‘சூழலைப் பாதுகாப்பதில் மாணவர்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் சித்திரப் போட்டி இடம்பெற்றது.

மன்ஃ வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம், மன் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு குறித்த போட்டி இடம்பெற்றது.

மன்னார் சித்திர ஆசிரியர் பெஞ்சமின் பெலிக்ஸ், வாழ்வுதய இயக்குனர் அருட்பணி. அன்ரன் அடிகளார், திட்டத்தின் இணைப்பாளர் திரு.யேசுதாசன் ஆகியோர் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து சிறந்த முதல் மூன்று வெற்றியாளர்களை தெரிவு செய்தனர்.

அத்துடன் வெற்றியாளர்களை கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வானது இன்று(20) காலை 10. மணியளவில் மன்/வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி. அன்ரன் அடிகளார் தலைமையில் அதிபர் ஏ.சி.சருபுதீன் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மொத்தமாக 12 வெற்றியாளர்களில் 07 வெற்றியாளர்கள் மன்/ வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்தவர்கள் .

கறிராஸ் வாழ்வுதயமானது சமயங்களைக் கடந்து வேப்பங்குளம் முஸ்லிம் பாடசாலையில் மாணவர் விருத்திக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள், மரம் நடுகை, மலசலகூட திருத்த வேலைகள், மற்றும் சூழல் பாதுகாப்பு சித்திர போட்டிக்கான கௌரவிப்பும் பரிசளிப்பும் முதலான செயற்திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுத்துள்ள மையைப் பாராட்டி பாடசாலை சமூகத்தினால் இயக்குனர் அருட்பணி அன்ரன் அடிகளார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

வெற்றியாளர்கள் விபரம்

பிரிவு 01

1ம்; இடம்: என். ஆயிஸா அப்ரோஸ், மன், வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
2ம் இடம்: றெ.யுகின்சிக்கா, மன், வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
3ம் இடம்: ரா.யனுஸ்கன், மன், வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

பிரிவு 02

1ம் இடம்: எம்,அல்மா அலா, மன்.வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம்
2ம் இடம்: என்.அஹமட், மன்.வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம்
3ம் இடம்: எஸ். சுகைனா, மன்.வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம்

பிரிவு 03

1ம் இடம்: ஆர். றிஸ்பா, மன்.வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம்
2ம் இடம்: பி.டிசான்தன், மன்.கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
3ம் இடம்: எஸ். சுஹா, மன்.வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம்

பிரிவு 04

1ம் இடம்: ஐ.எம்.சஹான், மன்.வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம்
2ம் இடம்: ஏ.எம்.நபீஸா, மன்.வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம்
3ம் இடம்; த.திசான், மன் கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை