LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் அரசியல் அழுத்தம் காரணமாக ஒரு பெரும்பான்மையினம் சார்ந்த உயரதிகாரி பதவி விலகினார்

Share

நடராசா லோகதயாளன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்போது அரசியல் அழுத்தம் காரணமாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த உயரதிகாரி வியாழக்கிழமை பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இலங்கையின் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் நிலந்த விஜயசிங்க அரசியல் அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகியுள்ளார்.

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளராக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்த நிலந்த விஜயசிங்க இவ்வாறு அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளார்.

தற்போது பெரமுன கட்சியின் அங்கத்துவத்தில் உள்ள தவிசாளரை அக்கட்சியை சேர்ந்தவர்களே அழுத்தம் கொடுத்து  நேற்று வியாழக்கிழமை (5) தினம் பதவி விலகல் கடிதத்தை வழங்கி வெளியேற வைத்துள்ளனர் எனவும் அறியப்படுகின்றது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல புதிய தவிசாளர் ஒருவரை நியமிக்கும் நோக்கிலேயே தற்போதைய தவிசாளரை பதவி விலக நிர்ப்பந்திக்கக்பட்டதாக தற்போதைய தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க.  தற்போதைய தவிசாளர் நிலந்த விஜயசிங்காவும் ஓர் சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது