ஸ்காபுறோவில் இயங்கிவரும் ‘கலையருவி நுண்கலைக் கூடத்தின்’ வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப்பெற்றது
Share
ஸ்காபுறோவில் ஶ்ரீமதி ரேணுகா விக்கினேஸ்வரன் அவர்களைக் குருவாகவும் நிறுவனராகவும் கொண்டு இயங்கிவரும் ‘கலையருவி நுண்கலைக் கூடத்தின்’ வெள்ளி விழா ஆண்டு கடந்தஞாயிற்றுக்கிழமையன்று சீனக் கலாச்சார மண்டபத்தில் கொண்டாடப்பெற்றது
பிரதம விருந்தினராக சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் அவர்களும் அழைக்கப்பெற்றிருந்தனர்.
விழாவின் ஆரம்பத்தில் ‘கலையருவி நுண்கலைக் கூடத்தின்’ மாணவ மாணவிகள் அனைவரும் நூற்றுக்கணக்கில் அட்டகாசமாக மேடையில் தோன்றி சபையோருக்கு வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து நடனநிகழ்ச்சிகள் ஆரம்பமாகியன.
ஆரம்ப நிலை மாணவ மாணவிகளிலிருந்து ஆசிரியர் தரத்தை எட்டியுள்ள மாணவிகள் வரை அனைவரும் தொடர்ச்சியாக கண்ணுக்கு விருந்தாக பல வகை நடனங்களை மேடையிஜல் சமர்ப்பித்தனர்.
நிறுவனத்தின் சிரேஸ்ட மாணவிகளின் சார்பில் குரு ஶ்ரீமதி ரேணுகா விக்கினேஸ்வரன் அவர்களுக்கு உயர்ந்த கௌரவம் வழங்கப்பெற்றது. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வெள்ளி விழா அனைவரை மகிழ்வித்துது என்றே கூறவேண்டும்.