LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரை மையப்படுத்தி வாழ்கின்ற மக்களுடைய வாழ்வாதார நிலைப்பாட்டை குழப்புகின்ற நிலை தோற்றுவிக்கப்படுகிறது

Share

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்

மன்னார் நிருபர்

(17-10-2023)

மன்னாரை மையப்படுத்தி இங்கு வாழ்கின்ற மக்களுடைய அடிப்படை வாழ்வாதார வாழ்வியல் நிலைப்பாட்டை குழப்புகின்ற நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது.எனவே இவற்றை செயற்பாடுகளை முற்றாக எதிர்க்கின்றோம்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை அபிவிருத்தி பணிகள் குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (17) மதியம் மன்னாரில் விசேட ஊடக சந்திப்பு இடம் பெற்றது.

-குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் , மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மன்னார் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார்,மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர் பத்திநாதன் குரூஸ் ஆகியோர் இணைந்து கருத்துக்களை முன் வைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்டத்தில் 143 காற்றாலைகள் 500 மெகா வேல்ட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அதன் பணிகள் இடம்பெற்று வருகின்றது.ஏற்கனவே மன்னார் மின்சார சபையின் ஏற்பாட்டில் 30 காற்றாலைகள் இயங்குகிறது.

3.45 மெகா வேல்ட் இல் 102.5 மெகா வோல்ட் மின்சாரம் தற்போது உற்பத்தியாகி வருகின்றது.அதன் 2வது கட்டம் 21 காற்றாலைகள் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றது.அதிலும் 3.45 தொடக்கம் 53.45 மெகா வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கும் அதே போல் முசலி – சிலாபத்துறை யில் இருந்து முள்ளிக்குளம் வரை 34 காற்றாலைகள் அமைக்க உள்ளனர்.

அதிர் 100 மொக வோல்ட் மின்சாரம் மொத்தமாக மின்சார சபைக்கு 250.45 மெகா வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் அதனுடைய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

30 காற்றாலையில் இருந்து மின் உற்பத்திகள் இடம் பெற்று வருகின்றன.தனி யாருடைய மன்னார் நருவிலிக்குளத்தில் 06 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.2. 45 மெகா வோல்ட் இல் 15 மெகா வோல்ட் மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

அதற்கு அப்பால் இந்தியாவினுடைய அனுசரணையில் அதானியினுடைய கம்பனியால் 52 காற்றாலைகள் நிறுவப்பட உள்ளது.

தென்னாசியாவில் ஆகப் பெரிய அளவில் மின் உற்பத்தியை உற்பத்தி செய்யக்கூடிய அளவில் 5.5 மெகா வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அளவில் ஏறக்குறைய 250 மெகா வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அளவில் 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அதனுடைய ஆரம்ப பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மன்னார் மாவட்டத்தின் தீவுப்பகுதியில் தரைத்தோற்றம் என்பது சாதாரண, ஏனைய நிலப்பகுதியை விட மிகவும் தாழ் நிலமாக காணப்படுகின்றது.

தாழ் நில பிரதேசத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கின்ற போது பலவீனமான பாறை உள் அமைப்புகள் ஏற்படுத்தக்கூடிய நிலை தோற்றுவிக்கப்படும்.

இயற்கை அனர்த்தம் ஏற்படுகின்ற போது மிக மோசமாக இத்தீவு பாதிக்கப்படும்.புவிச் சரீ தவியலாளர்கள் எச்சரிக்கின்ற ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது.மேலும் யுனெஸ்கோவின் அறிக்கையின் படி மன்னார் தீவு அழிகின்ற ஒன்றாக காணப்படுகின்ற மையினால் அதை பாதுகாக்க வேண்டும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மன்னார் தீவில் 3 மாடிகளுக்கு மேல் கட்டிடங்கள் கட்ட இன்று வரை அனுமதி இல்லை.இந்த விவகாரங்களை அடிப்படையாக கொண்டு மன்னார் தீவு பிரதேசத்தில் காற்றாலை தொடர்ந்து அமைக்க கூடாது.

தொடர்கின்ற பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும்,தீவுக்கு வெளியில் அல்லது வேறு பிரதேசத்தில் இந்த காற்றாலைகள் அமைக்க முடியும்.

நிபுணர்களின் கூற்றின் பிரகாரம் மன்னார் தீவு க்கு அப்பால் உள்ள பிரதேசங்களிலும் கூட அதனை விட கூடிய அளவு காற்று கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எல்லா விடையங்களிலும் மன்னாரை மையப்படுத்தி இங்கு வாழ்கின்ற மக்களுடைய அடிப்படை வாழ்வாதார வாழ்வியல் நிலைப்பாட்டை குழப்புகின்ற நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது.எனவே இவற்றை முற்றாக எதிர்க்கின்றோம்.

இவ் விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி,மின்வலு சக்தி அமைச்சர்,வடமாகாண ஆளுநர்,இந்திய தூதரகம் போன்றவற்றிற்கு கடிதம் எழுதுவதோடு,அவர்களையும் நேரில் சந்தித்து இவ் விடையங்களை எல்லாம் தெளிவு படுத்தி மன்னார் தீவுக்குள் இந்த காற்றாலை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்க உள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.