LOADING

Type to search

ராசி பலன்

27.10.2023 வெள்ளி முதல் 02.11.2023 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

வீரியத்தோடு செயல்படும் வாரம். காதல் கை கூடும். சுபச்செய்திகள் இல்லம் தேடி வரும். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு. இடமாற்றம் நன்மை தரும். பெரியோர்களின் வாழ்த்து கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். தாய் வழி உறவில் விரிசல் ஏற்படும். குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. தொழில் முன்னேற்றம் தரும். தொலைபேசி தகவல் மகிழ்ச்சி தரும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். சுறுசுறுப்பு பெருகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கூடும். கூட்டுத்தொழில் கவனம் தேவை. திருப்பங்கள் நிறைந்த காலம். பெண்களுக்கு அணிகலன் சேரும். வம்பு வழக்குகள் தீரும். எண்ணங்கள் வண்ணமயமாகும். உறவினரால் உதவிகள் கிட்டும்.

சகோதர வழியில் சந்தோஷம் கூடும். காதலர்களுக்குள் கையிருப்பு கரையும். வியாபாரம் விருத்தியாகும். வருமானம் திருப்தி தரும். வாகன மாற்றம் உண்டு. மாற்று யோசனை பலன் தரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விளையாட்டில் கவனம் தேவை. புது முயற்சிகளை தள்ளிப்போடவும். பெரியோர்களின் ஆதரவு கிட்டும். ஆணவத்தை தவிர்ப்பது நல்லது. பயணத்தால் வெகுமதி கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும். முடிவுகளில் தெளிவு இருக்கும். திறமைகள் வெளிப்படும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மெத்தனப்போக்கு மாறும். மேன்மைகள் தொடரும். புதிய நட்பு உருவாகும். சிரித்த முகத்தோடு
காணப்படுவீர்கள். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். நல்ல நேரத்தையும், நன்மையான காலத்தையும் உண்மையாக சந்திக்கக்கூடிய காலம். மௌன விரதம் இருப்பது நல்லது. தொடுத்த வெற்றியை சந்திப்பீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: தட்ஷிணாமூர்த்தி
அதிர்ஷ்ட எண்: 1, 4, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, F

ரிஷபம்:

பிரபல்யம் கிடைக்கும் வாரம். ஆதாயம் மிகுதியாகும். திட்டமிட்ட காரியம் ஜெயமாகும். நட்டமில்லாத நன்மைகள் அதிகரிக்கும். நண்பர்களால் நன்மை உண்டு. உத்தியோக உயர்வு ஏற்படும். உறவினர் வருகை உண்டு. அத்தியாவசிய செலவு அதிகமாகும். ஆடம்பர எண்ணம் மேலோங்கும். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். ஏராள நன்மைகள் அதிகரிக்கும்.

கோபத்தையும், வேகத்தையும் தவிர்த்து லாபத்தை அடையும் காலம். எதிரிகள் தொல்லைகள் குறையும். தனவரவு அதிகரிக்கும். வாக்குவாதங்கள் உருவாகும். பணியில் கண்டிப்பு தேவை. பெற்றோர் நலனில் அக்கறை கூடும். பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும். ஆன்மீக சிந்தனைகள் அதிகமாகும். பயணங்களால் இடையூறு ஏற்படும். மறைமுக எதிர்ப்பு வலுக்கும். காசு, பணம் சேர்க்கை அதிகரிக்கும். பொல்லாத காலங்கள் சொல்லாமல் விலகும். பொது வாழ்வில் புகழ் கூடும். எதிரிகளால் ஏற்றம் கிட்டும். அலைபேசித் தகவல் ஆதாயம் உண்டு. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பூமி வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோக உயர்வு கிட்டும். இடமாற்றம் நன்மை தரும். ஏற்றங்கள் அதிகரிக்கும் காலம். பரபரப்பே இல்லாமல் பணவரவு பெருகும். மங்கல செய்தியால் மனம் மகிழும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். ஆதாயம் பெருகக்கூடிய காலம். கல்வியால் செலவு ஏற்படும். குடும்ப ஒற்றுமை பலப்படும். குதூகலம் தழைத்தோங்கும். நிலம் வாங்கம் யோகம் உண்டு. வளம் பெருகும். உடல்நலம் கவனம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: மாரியம்மன்
அதிர்ஷ்ட எண்: 6, 4, 3, 2 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, A

மிதுனம்:

உழைப்பால் மதிப்பு சேரும் வாரம். இரும்புத்தொழில் ஏற்றம் தரும். கூட்டுத்தொழில் கவனம் தேவை. உறவினரால் செலவு உண்டு. நன்மதிப்பு பெருகும். பாராட்டுக்கள் கூடும். பரபரப்பான சூழ்நிலை மாறும். புதிய முயற்சியைத் தள்ளிப் போடவும். பெரிய திருப்பம் ஏற்படும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். சகோதரியால் நன்மை உண்டு. படிப்பில் கவனம் தேவை. போட்டிகள் வெற்றி தரும். இறுகிய நிலை மாறும். பணிமாற்றம் நன்மை தரும். பாக்கியங்கள்
அதிகரிக்கும். கசந்த காலம் விலகும். வசந்த காலம் உருவாகும். வலிமையான காலமாக அமையும். மாற்று எண்ணம் உதயமாகும். தோற்றப்பொலிவு கூடும். வேற்று மதத்தினரால் உதவிகள் சேரும். பொதுபணியில் ஆர்வம் கூடும். சுப காரியம் கூடி வரும். அரசியல் சந்தர்ப்பம் அமையும். பழைய நட்புத்தொல்லை தரும். இல்லத்தில் நல்லவை நடக்கும். கடன் உபத்திரவம் குறையும். உறவினர் பாராட்டுக் கிட்டும். உடல்நலனில் அக்கறை தேவை. பயணம் நன்மைத் தரும். அச்சத்தைத் தவிர்ப்பது நல்லது. உச்சத்தை அடையும் காலம் ஏற்படும். ஆன்றோர்கள் வாழ்த்துக் கிட்டும். வியாபார வளர்ச்சி உண்டு. கொடுக்கல், வாங்கலில் பிரச்சனை ஏற்படும். உறவினரால் தொல்லை ஏற்படும். கொள்கையில் பிடிப்பு சேரும். உடல் உபாதை தீரும். பொறுப்புக்கள் கூடும். வருமானம் சேரும். சாதனை நிகழ்த்தக்கூடிய காலம். மேன்மைகள் அதிக அளவில் பெருகும் காலம்.

வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி
அதிர்ஷ்ட எண்: 9, 7, 5, 3 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, X

கடகம்:

சவாலான விஷயங்களை சமாளிக்கும் வாரம். சினத்தை தவிர்ப்பது நல்லது. பணச்சேர்க்கை உண்டு. புத்தாடை சேர்க்கையுண்டு. புதிய தொழில் வாய்ப்பு ஏற்படும். மன சந்தோஷம் கூடும். மருத்துவச் செலவு கூடும். அனுகூலமான போக்கு நிலவி வரும். காரிய அனுகூலம் தரும். கடனால் பிரச்சனை வரும்.

விவசாயம் விளைச்சல் தரும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். வெற்றி கிடைக்கக்கூடிய காலம். நல்லவராக இருப்பீர்கள். வல்லவராக வாழ விரும்புவீர்கள். கனவுகள் நிறைவேறும். ஆசைகள் பூர்த்தியாகும். தகுதியோடும், மிகுதியோடும் வாழக்கூடிய காலமாக அமையும். புதிய சொத்துக்கள் சேரும். காரியம் கைக்கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்பு பெருகும். விளைச்சல் அதிகமாகும். விவசாயம் மேன்மை பெறும். வெளியூர் பயணம் ஏற்படும். உத்தியோக வாய்ப்பு கிட்டும். பூர்வீக சொத்து சேரும். அந்தஸ்து கூடும். அடுத்த நபரால் தொல்லை உண்டு. குதூகலம் சேரும். வியாபாரம் உயரும். வில்லங்கம் விலகும். தீய எண்ணம் விலகும். உடன் பிறப்புக்கள் தொல்லை தருவர். திடீர் தனவரவு ஏற்படும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. மனோ தைரியம் அதிகரிக்கும். மரியாதையான குணம் அதிகரிக்கும். இனிய நட்புக்கள் உருவாகும். பெரிய வெற்றி கிடைக்கும். காதலில் கண்ணியம் கூடும். கணவன், மனைவி கௌரவம் அதிகரிக்கும். பெரியோர்கள் விரோதம் ஏற்படும். நெருக்கடிகள் நீங்கும். கல்வியில் மேன்மை கிட்டும். திடீர் வரவு உண்டு. அரசியலில் புகழ் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: திரௌபதி அம்மன்
அதிர்ஷ்ட எண்: 7, 4, 1, 9 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, K

சிம்மம்:

எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும் வாரம். அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் கூடும். தர்மச் சிந்தனையும் மேலோங்கும். வெற்றிகள் குவியும். எதிரிகள் உதிரியாவார்கள். கல்விச் சலுகைகள் கிட்டும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. தொழில் போட்டி மறையும். சோதனைகள் குறையும். குடும்ப வாழ்வில் வளம் பெருகும். உத்தியோகம் திருப்தி தரும். பணி மாற்றம் ஏற்படும். சிறியவர் முதல் பெரியவர் வரை சிறப்புக்களை சந்திப்பார்கள். கஷ்ட காலங்கள் விலகும் காலம். கணவன், மனைவி கௌரவம் அதிகரிக்கும். பெரியோர்கள் விரோதம் ஏற்படும். நெருக்கடிகள் நீங்கும். திடீர் வரவுகள் உண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் சேரும். கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும். நிதி பற்றாக்குறை நீங்கும். கடன் பிரச்சனை தீர்வுக்கு வரும். கால்நடைகளால் சிரமம் உண்டு. கலைத்தொழில் கவனம் தேவை. செயல்திறன் வெளிப்படும். மங்களச்செய்தி வரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். காரிய வெற்றி கிடைக்கும். இளமையோடும், பெருமையோடும் காட்சியளிப்பீர்கள். பாராட்டுக்கள் தேடி வரும்.

பயணம் அனுகூலம் தரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். கடமையில் தடங்கல் ஏற்படும். காதலில் பிரிவு ஏற்படும். கல்விக்கடன் ஏற்படும். முதலீடுகளை தவிர்க்கவும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கிட்டும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நன்மைகள் பெருகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: நரசிம்மர்
அதிர்ஷ்ட எண்: 4, 7, 9, 2 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, P

கன்னி:

நினைத்தது நடக்கும் வாரம். திட்டமிட்ட காரியங்கள் நட்டமில்லாமல் நடக்கும். மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். கலை ஆர்வம் பெருகும். உடல் உஷ்ணம் உண்டாகும். விபரீத போக்கு மாறும். பூர்வீக சொத்து வந்து சேரும். சொல்லில் கவனம் தேவை. வீண் வம்பு அதிகரிக்கும். புதிய நட்பில் எச்சரிக்கை தேவை. இயந்திர பணியில் நிதானம் தேவை. குழந்தைகள் நலத்தில் கவனம் தேவை. அலைபேசி செய்தி ஆனந்தம் தரும். துன்பங்கள் விலகும். கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். கஷ்ட காலங்கள் விலகி அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அலைமோதும். பூர்வீக சொத்து கிட்டும். தொழில் வளர்ச்சி கூடும். சகோதாரியால் லாபம் உண்டு. உறவினரால் உற்சாகம் கூடும். கைப்பொருள் களவுப்போகும். சுபச்செய்தி வரும். விவசாயம் லாபம் தரும். வீடு, மனை யோகம் உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. முயற்சிகள் வெற்றி தரும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். புதிய நட்பு உருவாகும். பழையக் கடன் வசூலாகும்.

பொருளாதாரம் வளர்ச்சி பெருகும். மிகையான நன்மை கிடைக்கும். ஆறு வகையான செல்வங்கள் அமைதியாக கிடைக்கும் காலம். தொழில் வழி தொல்லை குறையும். பயணம் ஆதாயம் தரும். வழக்கு வெற்றி தரும். குழந்தைகளால் குதூகலம் கூடும். இடையூறுகள் அதிகமாகும். கூட்டுத்தொழில் மோசடி ஏற்படும். உடன்பிறந்தவரால் ஆதாயம் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: மஹாலஷ்மி
அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, A

துலாம்:

இல்லம் வளர்ச்சி அடையும். கலையான தோற்றமும், கனிவான பேச்சும் அவசியம். தெளிவான சிந்தனையால் மலிவான நட்புக்கள் விலகும். தந்தையால் நலம் குறையும். மாணவர் திறமை பளிச்சிடும். ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. வீடு, மனை யோகம் உண்டு. தன்னம்பிக்கை கூடும். நிர்வாகத்திறமை அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் உண்டு. நினைத்தது நிறைவேறும். அந்தஸ்து அதிகமாகும். வாழ்க்கை வசதி பெருகும். பழையக்கடன் ஒழியும். இடமாற்றம் நன்மை தரும். சாதனைகள் நிகழும் காலம். பெண்களின் கௌரவம் உயரும். கூட்டுத்தொழில் ஏற்றம் தரும். பணவரவு திருப்தி தரும். பல்வலி வந்து போகும். தாய்வழி உறவு நன்மை தரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் நன்மை உண்டு. பூமியால் லாபம் உண்டு. பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. சொல்லில் கவனம் தேவை. வீண் வம்பு அகலும். புதிய நட்பில் எச்சரிக்கை தேவை. பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். இழந்த கௌரவம் திரும்ப
கிடைக்கும். பெருமைகள் கூடும். வறுமைகள் விலகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் நலத்தில் கவனம் தேவை. இனிய வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமகள் கிருபைகள் உண்டு. தெய்வ கடாட்ஷம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை கூடும். நிதி நிலைமை சீராகும். உதவிகள் கிடைக்கும். விவாத முயற்சி வெற்றி தரும். பிணிகள் நீங்கும். பணியில் கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கைப்பொருள் களவுப்போகும். விவசாயம் லாபம் தரும். அச்சுத்தொழில் ஆதாயம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ அலமேலுமங்கை
அதிர்ஷ்ட எண்: 1, 4, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: அடர்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: C, Z

விருச்சிகம்:

மரியாதை உயரும் வாரம். நடுத்தரமான நன்மைகள் அடுத்தடுத்து கிடைக்கும். மங்கள செய்தியால் மனம் மகிழும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பழைய பகை மாறும். பிள்ளைகளால் பெருமை சேரும். மனைவியால் மதிப்பு உயரும். திடீர் செலவு ஏற்படும். சகோதர வகையில் சகாயம் கிட்டும். தனவரவுகள் தடைப்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொல்லை தந்தவர் விலகிவிடுவர். தொழில் வளர்ச்சி மேன்மை தரும். எண்ணங்கள்
ஏற்றம் தரும். ஆபரணச் சேர்க்கையுண்டு. விளையாட்டுத் துறையில் வெகுமானம் உண்டாகும். கலைத்தொழிலில் கௌரவம் கூடும். கனவு பலிதமாகும். வெளிநாட்டுப் பயணம் லாபம் தரும். வெகுமதிகள் சேரும். உடல்நிலையில் அக்கறை தேவை. சினம் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் நல்ல செய்திகள் வரும். நண்பர்கள் பிரிவு ஏற்படும். உற்சாகம் கலை கட்டும். ஆறுதலான சூழ்நிலை அமையும். மருத்துவ நிவர்த்தி ஏற்படும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும்.
பிள்ளைவழி தொல்லை தீரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. திருப்பங்கள் நிறைந்த வாரம். பெண்களின் ஆலோசனை பெருமை தரும். உத்தியோக இடமாற்றம் உண்டு. கர்ஜனையோடு வலம் வரக்கூடிய காலம். பக்கத்து வீட்டு பகை மாறும். உடல்சோர்வு ஏற்படும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் வெற்றி பெறும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். சுயத்தொழில் வாய்ப்பு அமையும். சுபச்செய்தி தேடி வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அஷ்டலஷ்மி
அதிர்ஷ்ட எண்: 4, 8, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, H

தனுசு:

பிரயாணம் பெருமை தரும். புதிய நட்பு உருவாகும். மெத்தனப் போக்கு மாறும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். பெற்றோர்கள் ஆலோசனை பயன் தரும். உடல்நிலையில் கவனம் தேவை. நட்பில் பிரிவு ஏற்படும். திட்டமிட்ட காரியம் ஜெயமாகும். குடும்ப மேன்மை அதிகரிக்கும். கட்டுமானப் பணியில் உள்ளவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். நண்பர்களால் நன்மை உண்டு. சுயத்தொழிலில் கவனம் தேவை. பணியில் ஆர்வம் ஏற்படும். பழையக் கடன் வசூலாகும்.

குடும்ப பாசம் அதிகரிக்கும். உடல்வலி தோன்றி மறையும். விபரீத போக்கு மறையும். விருப்பமான தொழில் அமையும். திடீர் செலவு ஏற்படும். பூர்வீகச் சொத்து கிடைக்கும். பெரிய வாய்ப்புக்கள் தேடி வரும். கல்வியில் கவனம் தேவை. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். வாகனச் செலவு ஏற்படும். எதிர்ப்புக்கள் ஓடி ஒழியும். செயலில் துணிவு கூடும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். குதூகல எண்ணம் அதிகரிக்கும். நன்மைகள் அதிகரிக்கும் காலம். பணவரவு அதிகரிக்கும். தனித்து நின்று ஜெயித்துக் காட்டும் அற்புதமான காலம். புதிய வாய்ப்புத் தேடி வரும். பழைய நண்பர் சந்திப்புக் கிட்டும். இனிய காதல் உருவாகும். எளிமையை விரும்புவீர்கள். இன்னல்கள் அகலும். குடும்ப தொல்லைகள் குறையும். தோல்விகள் விலகும். கட்டிடத்தொழில் லாபம் தரும். அரசியலில் புகழ் கூடும். வீண் பழி அகலும். மன சஞ்சலம் குறையும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். கல்வியில் மந்த நிலை ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: தனலட்சுமி
அதிர்ஷ்ட எண்;: 7, 2, 4, 8 அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, I

மகரம்:

உன்னதம் நிறைந்த வாரம். உலோகத்தொழில் உயர்வு தரும். ஆடை, அணிகலன் சேர்க்கையுண்டு. பயணம் லாபம் தரும். எண்ணிய காரியம் கைகூடும். ஏற்றங்கள் அதிகரிக்கும். எதார்த்தமான சிந்தனையில் ஏறுமுகம் காணக்கூடிய ஆறுதலான காலமாக அமையும். அறிவாற்றல் பளிச்சிடும். மற்றவரால் பாராட்டப்படுவீர்கள். உடல்நலம் சீராகும். புதிய பதவிகள் கிட்டும். பணியில் உயர்வு உண்டு. இடமாற்றம் நன்மை தரும். பொருள் வரவு திருப்தி தரும். வாய்ப்புக்கள் கூடும். புதிய தொழில் முயற்சி பலன் தரும். இனிய எண்ணம் உதயமாகும். பழையக்கடன் ஒழியும். வாழ்க்கை வசதி பெருகும். அந்தஸ்து அதிகமாகும். நினைவாற்றல் பெருகும். அரசாங்க அனுகூலம் உண்டு. நிர்வாகத் திறமை கூடும். தன்னம்பிக்கை கூடும். ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. எடுத்த காரியத்தில் ஏற்றம் கிட்டும். படித்த கல்விக்கு உத்தியோகம் கிடைக்கும். உபயோகமான காலம். புதிய நண்பரை சந்திக்க நேரிடும். பணியில் கண்டிப்பு அவசியம். தொழில் லாபம் பெருகும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். வழக்கு முடிவுக்கு வரும். எதிர்ப்பார்ப்புக்கள் குறையும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். உறவினர் வருகை உற்சாகம் தரும். பூமி சேர்க்கையுண்டு. ஏற்றுமதி தொழில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பாராட்டுக் கிட்டும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். பிள்ளைகளின் கல்விச்செலவு அதிகரிக்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும். அதிகாரம் உயரும். எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும்.
வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும். கன்னிப் பெண்களுக்கு சுபச்செய்தி வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விருட்ஷ தேவதை
அதிர்ஷ்ட எண்: 5, 4, 1, 2 அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, G

கும்பம்:

வம்பு தும்புகள் ஒழியும் வாரம். மகிழ்வான நிகழ்வுகளை சந்திக்கக்கூடிய சந்தோஷமான காலம். உறவினர் வருகை உற்சாகம் தரும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். எதிர்பார்ப்புகள் குறையும். வழக்கு முடிவுக்கு வரும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் லாபம் பெருகும். பணியில் கண்டிப்பு அவசியம். பழைய நண்பரை சந்திக்க நேரிடும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். பிள்ளைகளின் கல்விச்செலவு அதிகரிக்கும். எண்ணிய காரியம் கைகூடும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். கஷ்ட காலம் விலகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அலைமோதும். மன உற்சாகம் அதிகரிக்கும். வாகன அபிவிருத்தி ஏற்படும். வழக்குகளால் தொல்லை உண்டு. இயந்திர தொழிலால் லாபம் உண்டு. கடன் தொல்லைகள் குறையும். கூட்டுப் பிரார்த்தனையில் மோசடி ஏற்படும். தன்னம்பிக்கை அதிகமாகும். சிறிய இடையூறு ஏற்படும். புண்ணிய ஸ்தலப் பயணம் உண்டு. ஆரோக்கியம் சீராகும். நல்லோர் நட்பு கிட்டும். ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். உடன் பிறந்தவரால் சலசலப்பு ஏற்படும். கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் அகலும். நிதி நிலைமை சீராகும். பணப்பற்றாக்குறை நீங்கும். பிரச்சனைகள் குறையும். சிறப்புக்கள் சேரும். தன்மானத்தோடு வாழும் காலம். தயாள குணம் மேலோங்கும். போட்டி, பொறாமைகள் விலகி நன்மைகள் பெருகும். வீரியத்தோடு செயல்படுவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ ஹரித்துவார்
அதிர்ஷ்ட எண்: 2, 9, 4, 6 அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, R

மீனம்:

பணிவான பேச்சு அவசியம் தரும் வாரம். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். கனத்த வருமானத்தை ஈர்த்துக் கொள்ளும் காலம். அறிவாற்றல் பளிச்சிடும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உடல்நலம் சீராகும். புதிய பதவி வாய்ப்பு வரும். பணியில் உயர்வு உண்டு. பொருள் வரவு திருப்தி தரும்.

வாய்ப்புக்கள் கூடி வரும். சக ஊழியா;கள் உதவி உண்டு. சம்பள உயர்வு கிட்டும். மனோபயம் ஏற்படும். உறவினர்களால் அலைச்சல் உண்டு. முதுகில் வலி வந்து போகும். திடீர் பயணம் உண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கமிஷன் தொழில் லாபம் தரும். சுபகாரியம் கைகூடும். சொத்துச் சேர்க்கை உண்டு. அறிமுகம் இல்லாதவாகள் மூலமாக ஆதாயம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். செல்வமும், புகழும் சேரும். பணியில் கண்டிப்பு அவசியம். கல்விச்செலவு கூடும். வழக்கு முடிவிற்கு வரும். பக்குவமான பேச்சு அவசியம். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. மிகையான நன்மை கிடைக்கக் கூடிய மிக அற்புதமான காலம். மரபை மீறிப் பேசிய உறவுகள் மனதாரப் பாராட்டும் காலம். நல்லோர்களின் வாழ்த்துக் கிட்டும். நீண்டநாள் பிரச்சனை முடிவிற்கு வரும். தாய் வழி உறவில் ஆதாயம் உண்டு. கால்நடைகளால் பலன் உண்டு. கன்னிப் பெண்களுக்கு சுபச்செய்தி வரும். ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை உயரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன்
அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: C, V