LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒளிவிழா!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் எற்பாட்டில் கிறிஸ்து பிறப்பின் ஒளிவிழா யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தலைவர் இ.சுரேந்திரன் தலைமையில் நடை பெற்றது.

இவ்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்து கொண்டதுடன், கிறிஸ்து பிறப்பின் மகிமையில் நாம் எதனை பின்பற்றுகின்றோம் என்பதனைப்பற்றி உரையாற்றினார்.

இதன்போது கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி, கிறிஸ்மஸ் தாத்தாவின் ஆடல் பாடல் ,சிறார்களின் ஆடல்பாடல்கள் என்பன இடம்பெற்றன.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் ம.கமலரூபன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.