LOADING

Type to search

இலங்கை அரசியல்

கேவலமான ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் இலங்கைத் தேசம்.

Share

கலக்கத்துடன் வருகை தரும் ஜனாதிபதியின் ரணிலின் யாழ். விஜயம்:தொடர்பில் 08 பேருக்கு எதிராக தடை உத்தரவு கோரியுள்ள பொலிஸார்

தமிழரசுக் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுமந்திரன். ஶ்ரீதரன் சிவஞானம் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இல்லை

(3-1-2024)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன் னெடுக்கப்படலாம் என கருதி 8 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது யாழ்ப்பாணம் பொலிஸாரால் 02-01-2024 செவ்வாய் அன்று குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக 04ம் திகதி முதல் 07ம் திகதி வரை விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான போராட்டத்தை தடுக்கும் பொருட்டு தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பித்துள்ளனர்.

இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், புதன்கிழமை (03) மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுமந்திரன். ஶ்ரீதரன் சிவஞானம் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இல்லை. இவர்கள் இருவரும் ஜனாதிபதியை வரவேற்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் யாழ்ப்பாண ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார.