LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டு வவுணதீவில் கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர் மற்றும் அவரது மகனும் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் விசாரணைக்கு ஒப்படைப்பு

Share

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் உட்பட்ட இருவரையும் விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க அனுமதியளித்ததுடன் எதிர்வரும் 24 ம் திகதிவரையும்; விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் 27ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) அவரது மகன் ஆகியேர் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னபல் மாவீரர்களுக்கான விளக்கேற்றிஅ ஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில்; சக்கரைவியாதியுள்ள மாவட்ட அமைப்பாளருக்கு காலில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளினால் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு நேற்று செவ்வாய்கிழமை எடுத்துக் கொண்டபோது மாவட்ட அமைப்பாளர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதால் அவர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் அவரது மகன் ஆஜராகிய நிலையில் கொழும்பில் இருந்து வருகைதந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டவர்களின் கையடக்க தொலைபேசியில் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதால் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி கோரியதையடுத்து அவர்களுக்கு நீதவான் மேலதிக விசாரணைக்கு அனுமதியளித்ததுடன் எதிர்வரும் 24 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.