LOADING

Type to search

இலங்கை அரசியல்

பெண்களுக்கான தொழிற்பயிற்சி முள்ளியான் கிராமத்தில் ஆரம்பம்!

Share

வடமரட்சி நித்தியவெட்டை பகுதியில் பெண்களுக்கான தையல், மேக்கப், ஐசிங், கைவேலை மற்றும் மனைப் பொருளியல் கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு முள்ளியான் கிராம அலுவலர் கி. சுபகுமார் தலைமையில் நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.

வெற்றிலைக்கேணி, போக்கறுப்பு, முள்ளியான் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட குறித்த கற்கை நெறியில் பல பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி, போக்கறுப்பு கிராம அலுவலர் மியூரி லக்சி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான நந்தகுமார், ஜெகதாசா மற்றும் கட்டைக்காடு, நித்தியவெட்டை, போக்கறுப்பு ஆகிய பிரதேசங்களின் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுடன் மாதர்சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், பெண்களுக்கான தொழில்வாய்ப்பை ஏற்படுத்துதல், போன்ற நோக்கங்களை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கற்கை நெறியில் பங்குபெறுபவர்கள் இறுதிவரை இடைவிடாது கற்றை நெறியை உரிய முறையில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதனையும் மருதங்கேணி பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி வலியுறுத்தினார்.