LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் உரும்பிராயில் உலருணவுப் பொதிகள் விநியோகம்

Share

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. ‘பகிர்ந்துண்டு வாழ்வோம்’ என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டம் நேற்று புதன்கிழமை (17.01.2024) சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இப்பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுகள் அடங்கிய பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அனுசரணையை அமரர் பொ.குமாரசாமி நினைவாக அவரது குடும்பத்தினர் வழங்கி வைத்துள்ளனர்.

கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட தொழில்வாய்ப்பு இழப்புகளைத் தொடர்ந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழுகின்ற மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடரின்போது ஆரம்பித்த ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ திட்டத்தைக் கைவிடாது தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.