LOADING

Type to search

இலங்கை அரசியல்

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக விழாவிற்கு கங்காதரணி தீர்த்தக் கேணியில் நீர் எடுக்கும் நிகழ்வு

Share

பு.கஜிந்தன்

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் 17.01.2024 அன்று பக்தி பூர்வமாக ஆரம்பமாகியதை தொடர்ந்து 18,19 ஆகிய தினங்களில் விஷேட, யாக, அபிஷேகங்கள் இடம்பெற்று, கும்பாபிஷேகத்திற்கான ஆலயத்தில் வைத்து செய்யப்பட்ட திருக்குடம் எடுத்துவரப்பட்டு திருக்குடமுழுக்கிற்காக பிரதான கும்பநீரானது கங்காதரணி தீர்த்தக் கேணியில் இருந்து எடுக்குவரும் சமய நிகழ்வு இன்று பக்திபூர்வமாக எடுத்துவரப்பட்டது.

புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்த மோத்தம த்ரயத்திரும்சமத் குண்டபக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் எதிர்வரும் 24.01.2024 அன்று காலை 09.38 முதல் 11.20 மணிமுதல் 33 குண்ட பக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் நிகழவுள்ளது.

21.01.2024 அன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கு உரிய தூபதீபம், யந்திர ஸ்தாபனங்கள், பரிவார மூர்த்திகள், பிரம்ஸ்தாபனம், அர்த்தபந்தண சாத்தல் இடம்பெற்று மறுநாள் 22.01.2024 அன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவாள்ள எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு மறுநாள் 23.01.2024 மாலை 05.00 வரை இடம் பெற்று இனிதே நிறைவடையும்.