LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்.

Share

(மன்னார் நிருபர்)

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஆறு கூடுதல் விசை யாழிகளை நிறுவுவதன் மூலம் மின்சார உற் பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை தனியார் துறை முதலீட்டாளர்கள் மூலம் நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மேலும் 20 வருட கால செயல்பாட்டுக் காலத்தோடு தொடர்புடைய மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியை பயன் படுத்த முடியாது என்பதால் குறித்த திட்டத்திற்கு தனியார் முதலீட்டை நாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.