இலங்கையில் தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது என்ற விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிக்கிறது என்கிறார் முத்து சிவமோகன்
Share
பு.கஜிந்தன்
நெல் சந்தைப்படுத்தல் சபையை விடுத்து தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது என்பது தொடர்பான விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிக்கிறது என இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார்.
31.01.2024 அன்று கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இந்த காலபோக செய்கையில்,
விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில் அரசாங்கத்திடம் இழப்பீடு கேட்டு நிற்கின்ற நேரத்தில் அரசாங்கம் நெல்லையும் கொள்வனவு செய்யாது தனியாருக்கு வழங்கினால், தனியார் நினைத்த விலையில் கொள்வனவு செய்வார்கள்.
தனியார் இன்னும் குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வார்கள். இதன் காரணமாக விவசாயிகளே பாதிக்கப்படுவார்கள் எனவும் மேலும் தெரிவித்தார்.