LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

Share
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  (08.02.2024 அன்று) சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். காக்கைத்தீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு செய்துக்கொள்வதற்கும், மீன்பிடி துறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் உரிய அனுமதிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கைகளை கௌரவ ஆளுநரிடம் முன்வைத்தனர்.
ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ ஆளுநர் கூறினார். அத்துடன் மீன்பிடி துறையை துப்பரவு செய்வதற்கான தற்காலிக அனுமதியை பெற்றுக் கொடுப்பதாகவும், உள்ளுராட்சி மன்றத்தினூடாக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை உரியவகையில் முன்னெடுப்பதாகவும்  கௌரவ ஆளுநர் தெரிவித்தார். மேலும் அயல் கிராமங்களுடன் சினேகபூர்வமாக செயற்பட்டு, ஒன்றிணைந்த அழைப்பை விடுக்கும் பட்சத்தில் நேரடியாக களத்திற்கு வருகை தரவும் தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர்களிடம் தெரிவித்தார்.