LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தனின வித்துடல் எள்ளங்குளம் 04-03-2024 அன்று மாவீர்ர் துயிலும் இல்ல மயானத்தில் புதைக்கப்பட்டது.

Share

நடராசா லோகதயாளன்.

தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தனின வித்துடல் எள்ளங்குளம் 04-03-2024 அன்று மாவீர்ர் துயிலும் இல்ல மயானத்தில் புதைக்கப்பட்டது.

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்ல மயானத்தில் 04-03-2024
அன்று தலைவர் பிரபாகரனின் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் திடீரென உயிரிழந்திருந்தார்.

சாந்தனின் உயிரிழப்பு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தழிப்பையும் ஏற்படுத்தியிருந்த்து.

குறிப்பாக உயிரோடு வருவாரேன எதிர்பார்த்திருந்த நிலையில் உயிரிழந்த நிலையில் தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு இடங்களிலும் அலைகடலெனத் திரண்டு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் உடுப்பிட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தலைவர் பிரபாகரனின் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் புடைசூழ நல்லடக்கத்திற்காக உடல் தூயிலும் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்ட போது வீதிகளில் திரண்டு மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

இறுதியாக எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்ல மயானத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.