LOADING

Type to search

இலங்கை அரசியல்

இஸ்லாமிய மதத்தை இழுவு படுத்திய ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபதாரமும்- நீதிமன்றம் தீர்ப்பு

Share

(கனகராசா சரவணன்)

கூரகல விகாரையில் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக சம்மந்தமாக ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே 28-03-2024 அன்று வியாழக்கிழமை 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபதாரமும் செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூரகல விகாரையில் வைத்து இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் இரண்டு வழக்குகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த இரண்டு வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நீதிபதி அவருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.