சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் காங்கிரஸ் நாட்டை ‘எக்ஸ்ரே’ செய்யும் – ராகுல் காந்தி
Share
பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “டெம்போவில் கோடீஸ்வரர்களிடமிருந்து” பெற்ற நோட்டுகளை பாஜக எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், சமத்துவத்தை உறுதிசெய்ய காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என்று கூறினார். அதானி மற்றும் அம்பானியிடம் இருந்து டெம்போக்களில் காங்கிரஸுக்கு பணம் கிடைத்தது என்று கூறிய பிரதமர் மோடியின் கருத்துக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பதிலளித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் கோட்டீஸ்வரர்களிடம் இருந்து பெற்ற ‘நோட்டுகளை’ எண்ணுகிறார்கள். நாங்கள் ‘சாதிக் கணக்கெடுப்பு’ மூலம் நாட்டை எக்ஸ்ரே செய்வோம்.
ஒவ்வொரு பிரிவினருக்கும் சமமான பங்களிப்பை உறுதி செய்வோம். அதானியும் அம்பானியும் கறுப்புப் பணத்தை அனுப்பினார்களா என்பது குறித்து சிபிஐ அல்லது இடி விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்” என்றார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக அரசை எதிர்க்கும் கட்சி விளம்பரத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். சமூக- பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தனது கருத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமரிடம் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.