LOADING

Type to search

கனடா அரசியல்

மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா

Share

33வது பொங்கும் பொழுது விழா June 08, 2024 

மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா. நடாத்தும் பொங்கும் பொழுது விழா ஜூன் 08 ஆம் திகதி சனிக்கிழமை, மாலை 5:30 மணி
தொடக்கம் இரவு 11:00 மணி வரை 3840, Finch Avenue East Scarborough Toraonto வில்
அமைந்துள்ள Metropolitan Centre மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இவ்விழாவில் பிரதம விருந்தினர் உரை, விழா சஞ்சிகை வெளியீடு, திரையிசைப் பாடல்கள்,
வீணை இசை, நடன நிகழ்ச்சிகள், ஆகிய நிகழ்சிகளோடு பழைய மாணவர்
கலந்துரையாடுவதற்குரிய சந்தர்பங்களுக்கும் இடம் அளிக்கப்படும்.

இவ்விழாவிற்கு பழைய மாணவர்கள், மாணவிகள் அவர்தம் வாழ்க்கைத் துணைவர்கள்,
பிள்ளைகள், நண்பர்கள், நலன்விரும்பிகள் யாவரும் சமூகமளித்து சிறப்பிக்குமாறு பழைய
மாணவர் சங்க செயற்குழு அங்கத்தினர் அன்புடன் அழைக்கின்றார்கள்.

தொடர்புகட்கு:
க.கமல்ராஜ்
தலைவர்
(416-821-7870)

செ.பார்த்திபன்
செயலாளர்
(647-710-9404)

சி. கணேசலிங்கம்
சங்க அங்கத்தவர்
(647-993-6248)