LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளாவில் 12 வயது மாணவி பலாத்காரம்: கராத்தே ஆசிரியருக்கு 110 ஆண்டு கடுங்காவலுடன் ரூ.2.75 லட்சம் அபராதம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Share

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம் என்ற பகுதியை சேர்ந்தவர் மோகனன்(51) கராத்தே ஆசிரியரான இவர் பகுதியில் ஒரு கராத்தே பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கராத்தே பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் மோகனனிடம் கராத்தே படிக்க வந்த 12 வயது மாணவியிடம் கராத்தே சொல்லிக் கொடுக்கும் போது நெருக்கமாக பழகியுள்ளார்.

பின்னர் அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து விட்டார். இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் முண்டக்கயம் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் போஸ்கோ பிரிவில் வழக்கு பதிவு செய்து மோகனனை கைது செய்தனர்.

இந்த வழக்கு ஈராற்றுப்பேட்டை விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஷன் தாமஸ், கராத்தே ஆசிரியர் மோகனனுக்கு 110 வருடம் கடும் காவல் சிறையும், ரூபாய் 2.75 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.