LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாட்டில் 7 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்த அதிமுக!

Share

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 32 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. இதைபோல, தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பின்னடைவு பெற்றுள்ளது. குறிப்பாக, அதிமுக தமிழ்நாட்டில் போட்டியிட்ட 32 தொகுதிகளில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.