LOADING

Type to search

உலக அரசியல்

மனிதர்களை இரண்டே நாளில் கொல்லக்கூடிய அரிய வகை நோய் ஜப்பானில் பரவுகிறது.

Share

ஜப்பான் நாட்டில் Streptococcal நச்சு அதிர்ச்சி நோய்க்குறி பரவல் அதிகரித்துள்ளது.

சூன் 2ஆம் திகதி ஜப்பானை தாக்கிய இந்நோய், கடந்த சில நாட்களாக இந்த அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது. இதுவரை 977 பேருக்கு இதன் பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. STSS (Streptococcal toxic shock syndrome) எனும் இந்நோய்தொற்று ஏற்பட்டால் 48 மணிநேரத்தில் உயிரைப் பறிக்கும் என்று கூறப்படுகிறது.

‘சதை உண்ணும் பாக்டீரியாவால்’ இந்த நோய் ஏற்படும் என Bloomberg தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்நோய்தொற்று 941 பேரை தாக்கியதாக பதிவாகியுள்ளது.

மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.