LOADING

Type to search

இந்திய அரசியல்

முதல்வர் ஸ்டாலின் ‘தந்தையர் தின’ வாழ்த்து

Share

“தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை” என்று, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தையர் தினத்தை (ஜூன் 16) முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!” என்று தெரிவித்துள்ளார்.

கூடவே தன் தந்தையும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.