இஸ்ரேல் பிரதமர் போர் கேபினட்டை கலைத்தார்
Share
ஹமாஸ் அமைப்பினர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா மீதான தாக்குதல் இஸ்ரேலின் முழு ஒத்துழைப்பு மற்றும் சம்மதத்துடன் நடைபெற வேண்டும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு விரும்பினார். இதனால் போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அனைத்து கட்சிகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட போர் கேபினட் அமைக்கப்பட்டது. இதற்கு நேதன்யா தலைமை தாங்கினார். இந்த நிலையில் போர் கேபினட்டை கலைப்பதாக நேதன்யாகு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜெனரல் பென்னி கான்ட்ஸ் வெளியேறிய நிலையில் நேதன்யாகு இந்த முடிவை எடுத்துள்ளார். உள்ள தேசியவாத மற்றும் மதம் சார்ந்த கூட்டணி கட்சிகள் தேசிய பாதுகாப்புதுறை மந்திரி இடாமர் பென்-கிர், நிதி மந்திரி பெசாலால் ஸ்மொட்ரிச் ஆகியோரை போர் கேபினட்டில் சேர்க்க வேண்டும் வலியுறுத்தினர். காசா மீதான போருக்கு பிந்தைய திட்டம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கும், போர் கேபினட்டில் அதிகாரிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.