LOADING

Type to search

கனடா அரசியல்

ஸ்காபுறோ நகரில் திறந்து வைக்கப்பெற்ற ‘விஜயா நகை மாளிகை’ தங்க ஆபரண விற்பனை நிலையம்

Share

ஸ்காபுறோ நகரில் கடந்த 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று 3341 Markham Road – Unit 127- Scarborough (MARKHAM & STEELES ) என்னும் விலாசத்தில் திறந்து வைக்கப்பெற்ற ‘விஜயா நகை மாளிகை’ தங்க ஆபரண விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில் அதன் உரிமையாளர்கள் யுகநீதரூபன்-விஜயதர்சினி தம்பதியின் அழைப்பை ஏற்று ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சர் றேமன்ட் சோ அவர்களும் துணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அத்துடன் அவர்கள் இருவரும் நிறுவனத்தின் வாசலில் கட்டப்பெற்றிருந்த ‘நாடாவை’ வெட்டி ‘விஜயா நகை மாளிகை’ தங்க ஆபரண விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தனர்.
முதலில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் என அழைக்கப்பெற்றிருந்த அன்பர்கள் அனைவரும் நாதஸ்வர- தவில் வாத்தியங்கள் ஒலிக்க, நிலையத்தின் வாசலுக்கு அழைத்துவரப்பெற்றனர்.

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் நண்பர்கள் உறவினர்கள்- ஊடகவியலாளர்கள்- பத்திரிகைகளின் சார்பில் அதன் பிரதம ஆசிரியர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்..

‘விஜயா நகை மாளிகை’ தங்க ஆபரண விற்பனை நிலையத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று விருந்துபசாரத்தை வழங்கிய மிகவும் உற்சாகமாக திறப்பு விழாவை நடத்தினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வாழ்த்த விரும்புவோர் 3341 Markham Road – Unit 127- Scarborough (MARKHAM & STEELES ) என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘விஜயா நகை மாளிகை’ தங்க ஆபரண விற்பனை நிலையத்திற்குச் செல்லவும்.

சத்தியன்

PHOTOS- SEITHY-GUNA- THANK YOU