LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டு கரடியனாற்றில் பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு

Share

(கனகராசா சரவணன்;)

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு பிரதேசதில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 299 ஜொனி கண்ணிவெடிகள், 19930 ரி.56 ரக துப்பாக்கி ரவைகள், 38 பியூஸ் வெடிபொருள் துண்டுகள் உட்பட பெருமளவிலான ஆயதங்கள் 10-07-2024 புதன்கிழமை (1மீட்டுள்ளதாக வாழச்சேனை கடதாசி ஆலை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பாளர் பொலிஸ் பரிசோதகர் கே.ஜி.லக்மல் குமார தெரிவித்தார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஷ;;ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர ஆலோசனையின்படி அம்பாறை பிராந்திய கட்டளை அதிகாரி திரு.ஏ.எஸ்.பி.குணசிறி, மட்டுமாவட்ட விசேட அதிரடிப்படை பொறுப்பாளர் சம்பத் குமாரவின் வழிகாட்டலில் வாழைச்சேனை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.ஜி.லக்மல் குமார, வவுணதீவு, கல்லடி, களவாஞ்சிக்குடி முகாம் கட்டளை அதிகாரிகள் தலைமையில் நீதிமன்ற உத்தரவை பெற்று இந்த அகழ்வுபணி இடம்பெற்றது

இதில் மிகவும் பாதுகாப்பாக பொலிதீன் பைகளில் சுற்றப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 299 ஜொனி கண்ணிவெடிகள், 19930 ரி.56 ரக துப்பாக்கி ரவைகள், 38 பியூஸ் வெடிபொருட்களை மீட்டனர். இதில் மீட்டகப்பட்ட ஆயுதங்களை நீதிமன்ற அனுமதியை பெற்று வெடிக்கவைத்து அழிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த காலத்தில் இந்த பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.