LOADING

Type to search

சினிமா

சூர்யா – ஹரி கூட்டணியில் உருவான திரைப்படம் “வேல்”

Share

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது  48-வது பிறந்தநாளை  முன்னிட்டு அவரது ரசிகர்கள் ரத்த தானம், உள்ளிட்ட சமூக சேவை உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். நடிகர் சூர்யாவும் ரத்த தானம் செய்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ரத்த தானம் செய்த ரசிகர்களை காணொளியில் சூர்யா வாழ்த்திய இணையத்தில் வைரலானது. இந்நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த ‘வேல்’ படம் இன்று மறுவெளியீடு செய்யப்படுகிறது. ”வேல்” திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது. ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த இத்திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். இதில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நடிகை அசின், கலாபவன் மணி, வடிவேலு, நாசர், சரண்ராஜ், லட்சுமி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் அம்பிகா ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். தன்னைபோலவே இருக்கும் இவர் யார் என வாசு துப்பறிகிறார். இதனைத் தொடர்ந்து தனது அண்ணன் தான் என்பது தெரியவர அவரை தனது உண்மையான பெற்றோரிடம் திரும்பக் அழைத்து வந்தாரா? அல்லது வேலுவை நேசிக்கும் கிராமத்தில் உள்ள குடும்பத்தினரிடமே விட்டு விட்டு வந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.