LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜனனத்தின் போதே அனாதையான இலங்கையின் அரசியலமைப்பு பேரவை இப்போது பெற்றோருடன் சச்சரவிடுகிறது?

Share

கிசாலி பின்ரோ ஜயவர்த்தன

உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த [கடந்த] வாரம் வழங்கிய ‘இடைக்கால உத்தரவு’ தொடர்பாக இலங்கை எதிர்பாராத விதமாக அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்நோக்குகின்றது. பல அடிப்படை உரிமைகள் தொடர்பான சவால்கள் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளும் வரை , பொலிஸ் மா அதிபர்’ அதிகாரங்கள், செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகளை’ பயன்படுத்துவதில் இருந்து கட்டுப்படுத்துவதற்கான இடைக்காலத்தடை ‘ உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியும் அரசாங்கமும் (உருவகமாக) கடவுள் வழங்கிய இந்த அன்பளிப்பைப் பற்றி மகிழ்ச்சியுறுவதை கற்பனை செய்வது கடினம் அல்ல.

‘வேறொரு தருணம், மற்றொரு இடம்?’ என்று இருந்திருக்க முடியாது.பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ள நிலையில், தற்போது அவரது கைகள் பிணைக்கப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில் அவரின் மறுப்பு நியாயமானது. ஒரு தேர்தல் வேட்பாளராக, அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலுக்காக பொலிஸ் மா அதிபரை பரிந்துரைக்கும் எந்தவொரு முயற்சியும், ‘பதினான்கு நாட்களுக்கு மிகாமல்’ (பிரிவு 41 (சி ) (2), விதி) செயல்படும் நியமனங்கள் அடுத்தடுத்த காலங்களுக்குச் செய்யப்படுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ‘தேர்தல் மனுக்கள்’ வாயிலாக .

அவர்களின் தரப்பில் தேர்தல் ஆர்வலர்கள், சிவில் சமூக வழக்கறிஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள், ‘பதில் ‘ பொலிஸ் மா அதிபர் இல்லாததால், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் , 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், அதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அறிவித்துள்ளனர். ஆனால் நிராகரிப்பு தொடருமானால் , பிரச்சினை தீர்க்கப்படாது. உரிய நடவடிக்கையின் மூலம் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் வரை, தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஒப்படைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தற்காப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

தற்போதைக்கு, நீதிமன்றத்தின் முற்றிலும் எதிர்பாராத ‘இடைக்கால உத்தரவுக்கு’ ‘இன்னொரு முறை, வேறொரு இடம் (1970களின் மெதுவான கதைக்கான பாடல் ) ஏன் அதிக வாய்ப்பாக இருந்திருக்க முடியாது என்று ஒரு விவேகமான ‘ஆணோ பெண்ணோ’ யோசிக்கலாம். விரக்தியடைந்த குடிமகன் மீது இடி விழுந்த பழமொழி போல, சில மாதங்களில் தங்கள் வாக்கைப் பயன்படுத்துவதற்குப் போராடுகிறாரா? பரவாயில்லை, அந்த எரிச்சலூட்டும் கேள்வி இப்போது உறுதியாக நமக்குப் பின்னால் உள்ளது. இந்த உத்தரவால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் களையப்பட வேண்டும்.

அரசியலமைப்பு பேரவை யாருக்கு சொந்தமானது?

அந்த சூழலில், ஒரு பழக்கமான அச்சம் மீண்டும் தலை தூக்கியுள்ளது, அரசியலமைப்பு பேரவை (சிசி)நிறைவேற்றதிகாரத்தின் ஒரு பகுதியா அல்லது சட்டவாக்க மன்றத்தின்[ பாராளுமன்றம்] ஒரு பகுதியா? அடிப்படை அரசியலமைப்பு தர்க்கம் இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு அழகாக எளிமையாக உள்ளது. சாராம்சத்தில், வெள்ளிக்கிழமை சபையில் பிரதமர் உச்சரித்தபடிஅரசியலமைப்புபேரவை பாராளு மன்றத்தின் ஒரு பகுதியாகும், பாராளுமன்றம் உச்சமானது மற்றும் பொலிஸ் மா அதிபர் தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டபோது நீதிமன்றம் அரசியமைப்பு பேரவையை கேள்வி கேட்க முடியாது. ஆனால் அந்த வாதம், அரசியலமைப்பின் 17வது திருத்தத்தின் கீழ் அரசியலமைப்புபேரவையை உருவாக்கும்போது, சரத்து 126 மற்றும் அதன் பல உட்பிரிவுகளின் கீழ் அரசியலமைப்பு பேரவையின் முடிவுகள் அடிப்படை உரிமைகள் மனுக்களுக்கு உட்படுத்தப்படும் சூழ்நிலையில் சாத்தியமான எதிர்கால நடவடிக்கை குறித்து சிந்தித்தது என்ற உண்மையை புறக்கணிக்கிறது.
ஜனாதிபதிக்கு விதிவிலக்கு கொண்ட எமது சோகமான வரலாற்றைக் கருத்தில் கொண்டு அரசியலமைப்பு பேரவைக்கு அபாயகரமான நிலைமை வழங்கப்படக்கூடாது என்ற பொது ஆர்வமுள்ள ஆலோசகர்களின் கடுமையான எச்சரிக்கைகளுக்கு இது ஒரு இணக்கமான ஒப்புதலாகும் . உண்மையில், நடைமுறையில் உள்ள ஒரு அரசியல் ஆட்சி (அல்லது அரசியமைப்பு பேரவை தானே) அரசியலமைப்பு பேரவை ஆனது ஒலிம்பஸில் உள்ள கடவுள்களைப் போன்று , எல்லா சவால்களிலிருந்தும் விடுபடக்கூடியது என்று கற்பனையாக வாதிடக்கூடிய ஒரு நாளின் சரியான எதிர்பார்ப்பில் அந்தக் சரத்து செருகப்பட்டது. அது நிச்சயமாக அப்படியல்ல, அந்த உண்மையை அரசாங்கம் சுருக்கமாக நினைவூட்ட வேண்டும்.

உண்மையில், 17 வது திருத்தத்திற்குப் பிறகு வந்த பல திருத்தங்களில் அதே எச்சரிக்கையுடன் இந்த அரசியலமைப்பு சரத்து பாதுகாக்கப்பட்டது. வேறுவிதமாக கூறுவது இப்போது அரசாங்கத்திற்கு இல்லை. ஒரு எரிச்சல் ஒருபுறம் இருக்க, ஜனாதிபதி மற்றும் அவரது பிரதமர்/அரசாங்கம் அவர்கள் வெளிப்படுத்தும் நிலைப்பாடுகள் குறித்து மனதில் தீர்மானிக்க வேண்டியதும் அவசியம். கடந்த வருட பிற்பகுதியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சபையில் சூடானவாதம் இடம்பெற்றது. அரசு வாதிடுகையில் (சில காரணங்களால்) உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவால் தடைசெய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைகளை அங்கீகரிக்கும் அதன் அதிகாரங்களை பிரயோகிப்பதிலிருந்தும் அரசியலமைப்பு பேரவையை தடைசெய்வதை உடனடி விடயமாகஇடைக்காலத்தடையாக உயர் நீதிமன்றம் தடைசெய்திருந்தது.

பிறக்கும்போதே அனாதையான அரசியலமைப்பு பேரவை

அப்போது அரசியலமைப்பு பேரவை ‘நிறைவேற்றதிகாரத்தின் ஒரு பகுதி’ என்று ஜனாதிபதி அதிகளவு வலுவாக கூறியிருந்தார் . இப்போதுஅரசியலமைப்பு பேரவைக்கு சிறப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த, அரசியலமைப்பு பேரவை யானது சட்டவாக்க [ பாராளு ]மன்றத்தின் ஒரு பகுதி என்று அவரது பிரதமர் வாதிடுவதை நாம் காண்கிறோம். அதில் உள்ள வெளிப்படையான முரண்பாடுகளை நன்கு உணர்ந்து, ஜனாதிபதியே தனது 2023 நவம்பர் நிலைப்பாட்டை விளக்குவதற்காக பாராளுமன்றத்திற்குள் அனைத்து மேற்கொள்வதை மறுத்துவிட்டார் , மாறாக, அவர் விவேகமான அமைதியை விரும்புவதாகத் தெரிகிறது.

முன்னதாக, புதியபொலி ஸ் மா அதிபர் (ஐஜிபி) மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதைஅரசியலமைப்பு பேரவை ‘நாசப்படுத்துகிறது’ என்று கூறிய அவர்,அரசியலமைப்பு பேரவையின் செயற் பாட்டை ‘ஆராய்வதற்கு’ ஒரு பாராளுமன்றத் தேர்வுக் குழுவை நியமிக்க முன்மொழிந்தார். அந்த அச்சுறுத்தலுக்குப் பின்வாங்கி, 17வது திருத்தத்தில் அரசியலமைப்பு பேரவையானது அரசியலமைப்பு ரீதியாக ஒரேமாதிரியான சிருஷ்டியாக கருதப்பட்டது என்பதை நான் இந்த பத்தியில் சுட்டிக் காட்டினேன் (பார்க்க, உரிமைகள் மீதான கவனம், ‘ஜனாதிபதி , பொதுமக்கள் நம்பிக்கை மற்றும் பாராளுமன்ற மூர்க்கத்தனம் ,’ 2023ஞாயிறு நவம்பர் 26, ).
நிச்சயமாக அரசியலமைப்பு பேரவை நிறைவேற்றதிகாரத்தின் செயற் பாட்டின் அம்சங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் உறுப்பினர்கள் , சட்டவாக்க[பாராளு] மன்றத்தின் பிரதிநிதிகள் மத்தியில் கணக்கிடப்படுகிறது. எனவே, இதுசில சட்டப் பிரிவுகளில் கருத்துக் கூறப்பட்டதற்கு மாறாக ஒரு ‘உறுப்பு’ அல்லது இரண்டின் ஒரு பகுதி அல்ல, சிறந்த பெற்றோருக்கு வெகு தொலைவில் உள்ள நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்க[பாராளு ] மன்றமும் , ‘நல்லாட்சி கைக்குழந்தையை’ கவனமாக வளர்க்கும் என்ற நம்பிக்கையான ஏக்கத்தில் இருந்து‘ஒரேமாதியான ’ அரசியலமைப்பு பேரவை 17வது திருத்தத்தின் கீழ் பிறந்தது.

பதிலளிக்க முடியாத கேள்வியைக் கேட்டல்

அந்த எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே பொய்த்துப் போனது, ஏனெனில்அரசியலமைப்பு பேரவை பிறக்கும்போதே கிட்டத்தட்ட அனாதையாக இருந்தது, பாராளுமன்றம் மன்றம் மற்றும் நிறைவேற்றதிகாரம் ஆகிய இரண்டும் ஒரு தரக் குறைவான அரசியல் கலாசாரத்திற்கு உண்மையாக இணங்கி அதன் செயற் பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு ஒத்துழைத்தன. இரண்டரை தசாப்தங்களுக்குப் பிறகும், அரசியலமைப்பு பேரவை யா னது அதன் முன்னாள் சிவில் சமூகத்தின் பெரும்பான்மையானது சிறுபான்மையினராகக் குறைக்கப்பட்டு, பத்தாவது உறுப்பினர் இன்னும் மேசைக்கு வந்து பரவலான பொதுமக்களின் பாராட்டைப் பெறாத நிலையில் அதன் நிழலாகவே உள்ளது.

இதற்கிடையில், பெற்றோர்கள் இருவரும், அரசியல் அதிகாரப் போராட்டங்களை நிலைநிறுத்துவதற்காக, அரசியலமைப்பு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக அல்லாமல் , தங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் போது, அந்த நோயுற்ற சிசுவை தனது சொந்தக் குழந்தை என்று கூறுகின்றனர். எனவே பிரிவின் இரு தரப்பிலும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ‘பகுதியா’ அல்லது சட்டவாக்க[ பாராளு] மன்றத்தின் ‘பகுதியா’ என்று கேட்கும்போது, அதுவே பதிலளிக்க முடியாத கேள்வியின் வரையறையாகும். எவ்வாறாயினும்,அரசியலமைப்பு பேரவைக்கு அரசாங்கம் தடையற்ற சலுகைகளை வழங்குவது தெளிவான சட்ட முரண்பாடுகளை முழுமையாக கொண்டது என்பது தெளிவாகிறது.

இந்த [கடந்த வார] நீதிமன்றத்தின் உத்தரவு, ‘ஒரு வலுவானமுதற் பிரதிமையிலேயே வழக்கு ‘ நிறுவப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் குழாம் மதிப்பிட்டதை அடுத்து வந்தது. இது (பொலிஸ் மா அதிபர் ) நியமனம் அரசியலமைப்பின் பொருந்தக்கூடிய விதிகளுக்கு முரணானது. இதன் விளைவாக, ‘தடை’ உத்தரவு, விண்ணப்பங்களின் இறுதித் தீர்மானம் வரும் வரை, அடுத்த விசாரணை திகதியான 11 நவம்பர் 2024 ஆனது வாக்கெடுப்பு திகதியை அதாவது 21செப்டம்பர் 21ஐ அன்று கடந்து செல்லும் வரை ‘இடைக்கால’ நடவடிக்கையாக இருந்தது.

நிச்சயமற்ற தன்மை நிறைந்த கருத்துக்கணிப்பு

ஜனாதிபதி ஒரு பதில் பொலி ஸ் மா அதிபரை நியமிப்பதைக் குறிப்பிடும் போது நீதிமன்றம்சாத்தியப்பாட்டைவெளிப்படுத்தும் ‘மே’ [may]என்ற வார்த்தையைப் பயன்படுத்தியமையும் அரசாங்கத்தால் அதற்குச் சாதகமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஒருவேளை அதன் அமைச்சர்கள் (வழக்கறிஞர்களும்) அடிப்படை விளக்கக் கோட்பாடுகளுடன் தங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம், அங்கு நிறைவேற்றதிகாரம் உட்பட ஒரு அதிகாரத்தின் மீது கடமை விதிக்கப்படும்போதுசாத்தியபாடைவெளிப்படுத்தும் ‘மே’ என்ற சொல் தேவையான வலு வுடன் வழங்கப்படுகிறது.

விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியும் பூமொட்டு சபை ஆதிக்கம் செலுத்தும் எண்ணற்ற வழிகள் உள்ளன (அவர்கள் ஒரு தேர்தலை விரும்புவது போல் விவிலியக் கொள்ளை நோய் தம்மீது வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்), இந்த களத்தை பயன்படுத்தி தேர்தல் செயல்முறையைத் தடுக்கலாம். அதன் விளைவாக ‘தேர்தல் மனுக்களுக்கு’ வழிவகுக்கும் பிற சிக்கல்கள், தேர்தலின் செல்லுபடியாகும் தன்மையில் போட்டியிடுவதும் ஏற்படலாம்.

எந்த அளவீட்டிலும் வெகு தொலைவில் இல்லாத அல்லது அனுமானமாக இல்லாத இத்தகைய நிகழ்வுகள்,காலம்தாழ்த்தி விவாதத்திற்கு எழாது என்று நம்பலாம்.
நன்றி:- சண்டே டைம்ஸ்